நன்றாக படிக்கக் கூடிய மாணவ, மாணவியருக்கு, "சீட்' கொடுத்து, அவர்களை,
தூங்கும் நேரம் தவிர்த்து, இதர நேரம் முழுவதும், படிக்க வைப்பதும், தேர்வு எழுத வைப்பதும் போன்ற செயல்களில், தொடர்ந்து ஈடுபட வைப்பது தான், நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் சாதனைக்கு காரணம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் படித்து, மாநில அளவில், "ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின், சொந்த மாவட்டத்தை விசாரித்தால், பெரும்பாலும், அவர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களாகத் தான் இருப்பர்.
நன்றாக படிக்கக் கூடிய புத்திசாலி மாணவ, மாணவியருக்குத் தான், அங்கே, "சீட்' கொடுக்கின்றனர். திறமையான மாணவர்களை, மேலும் "பட்டை' தீட்டுவது, பெரிய சாதனை கிடையாது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், சாதாரண மாணவ, மாணவியர் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். "சராசரி' மாணவர்களுக்கு, நாமக்கல் பள்ளிகளில் "சீட்' கிடையாது.
நன்றாக படிக்கும் மாணவர்களை சேர்த்துக் கொண்டு, முக்கிய பண்டிகை நாட்கள் தவிர, மற்ற அனைத்து நாட்களும், பள்ளி வேலை நாட்களாக வைத்துக் கொள்கின்றனர். மாணவர்கள் தூங்கும் நேரம் தவிர, மற்ற அனைத்து நேரங்களிலும், படிக்க வைப்பது, படித்ததை, தேர்வெழுத வைப்பது என்ற வேலையை, பிரதானமாக செய்கின்றனர். இதையே, திரும்ப திரும்ப செய்கின்றனர்.
பிறகென்ன, தேர்வில், 200க்கு 200 மதிப்பெண்களை எடுத்து விடுகின்றனர். பள்ளி வேலை இயங்கும் நாட்கள், தேர்வுகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில், நடைமுறை ரீதியாக, அரசு பள்ளிகளுக்கு, சில சிக்கல்கள் இருக்கின்றன.குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு இதர பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், அவர்களின், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு, தனியார் பள்ளிகளில் இல்லை. தனியார் பள்ளிகளில், சரியாக வேலை பார்க்கவில்லை எனில், வேலை போய்விடும். இது போன்ற எச்சரிக்கை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. மேலும், ஆண்டுக்கு, 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இவ்வளவு பணம் வசூலிப்பதால், நன்றாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு, பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால், அந்த மாவட்ட பள்ளிகள், மாநில அளவில் சாதிக்கின்றன.இவ்வாறு கல்வித் துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.கோடிகளில் புரளும் நிர்வாகிகள்!
தனியார் பள்ளிகளில், இயக்குனர்களாக இருப்பவர்கள் அல்லது அவர்களின் மனைவியர் அல்லது கணவர்கள், அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து விட்டு, வி.ஆர்.எஸ்., கொடுத்தவர்களாக உள்ளனர்.
ஐந்து, ஆறு ஆசிரியர்கள் சேர்ந்து, ஒரு பள்ளியை ஆரம்பித்து விடுகின்றனர்.பின், மத்திய அரசு சம்பளத்திற்கு இணையாக சம்பளம் கொடுத்து, திறமையான ஆசிரியர்களை, பள்ளிகளில் நியமிக்கின்றனர். அதிக சம்பளம் காரணமாக, ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.
இதனால், "ரிசல்ட்', ஆண்டுக்கு ஆண்டு, எகிறியபடி உள்ளது; பள்ளிகளின் நிர்வாகிகள், கோடிகளில் புரள்கின்றனர். - நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக