வெள்ளி, 10 மே, 2013

Total 730 பேருந்துகள் உடைப்பு 17 பேருந்துகள் எரிப்பு ! பா மா காவுக்கு அங்கீகாரம் ரத்து ?


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் ஒரு வாரத்தில் 730 அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. 17 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ம.க. சார்பில் விழுப்புரத்தில் கடந்த 30-ஆம் தேதி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சி நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல 2012-ஆம் ஆண்டு கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்குக்காக அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. காடுவெட்டு ஜெ.குரு கைது செய்யப்பட்டார். பாமக தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அந்தக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் பஸ் உடைப்பு, பேருந்து எரிப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.
கடந்த ஒரு வாரத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 730 அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. 17 அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன.
இதில் அரசு பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் அந்தக் கட்சியைச் சேர்ந்த 6,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே இருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: