2ஜி
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு
நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற
கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று,
முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார். ஆனால்,
அவரது கோரிக்கையை கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ ஏற்கவில்லை. இதையடுத்து
தனது தரப்பு நியாயத்தை விளக்கிய ராசா, இது தொடர்பாக பி.சி.சாக்கோவுக்கு
விளக்கம் அனுப்பினார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர்
சிதம்பரம் மற்றும் தொலைதொடர்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகே,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுத்ததாக கூறியிருந்தார். இந்த விளக்கத்தை கூட்டுக்குழு அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்நிலையில்,
ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு
நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 2ஜி ஊழல் வழக்கில்,
ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள சாட்சியங்களுடன், பிரதமர் மன்மோகன்சிங், நிதி
அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர்
சுப்பாராவ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று
கூறியிருந்தார்.
இந்த
மனுவை, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரணைக்கு
ஏற்றுக்கொண்டார். மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூலை மாதத்திற்குப் பிறகு
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக