புதுடில்லி:ரயில்வே வாரிய உறுப்பினருக்கு, முக்கியமான பொறுப்பை
ரயில்வே அமைச்சராக பதவி வகிப்பவர் பவன் குமார் பன்சால், 64. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, இவரின் நெருங்கிய உதவியாளர் மற்றும் உறவினர் விஜய் சிங்லா. கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, சண்டிகார் தொகுதியில், பன்சால் போட்டியிட்டார். அப்போது, அவரின் தேர்தல் பிரச்சார பணிகளை முழுமையாக கவனித்தவர் விஜய் சிங்லா.இந்நிலையில், ரயில்வே பொறியியல் சேவை பிரிவில், 1975ம் ஆண்டு பணியில் சேர்ந்த, சமீபத்தில், ரயில்வே வாரிய உறுப்பினராக (ஊழியர்கள் விவகாரம்) நியமிக்கப்பட்ட, மகேஷ் குமார் என்பவர், விஜய் சிங்லாவை அணுகினார். அவரிடம் ரயில்வே வாரியத்தில், தலைவர் பதவிக்கு அடுத்த பொறுப்பான, மின் துறை பிரிவின் உறுப்பினராக தன்னை நியமிக்க, அமைச்சர் பன்சால் மூலம் உதவ வேண்டும் என, கேட்டார்.
அதற்கு, 10 கோடி ரூபாய், லஞ்சமாகத் தரும்படி, விஜய் சிங்லா தெரிவித்துள்ளார். இருவரிடையே நடந்த பேரத்தில், மகேஷ் குமார், 2 கோடி ரூபாய் கொடுப்பது என, முடிவானது. ரயில்வே துறையில் வரும் நாட்களில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதற்கான டெண்டர்கள் விடும் பொறுப்பு, ரயில்வே வாரியத்தில், மின்துறை பிரிவை கவனிக்கும் உறுப்பினருக்கே உண்டு.
அதனால், அந்தப் பதவியை பிடித்து விட்டால், ஏராளமாக பணம் சம்பாதித்து விடலாம் என்பதால், மகேஷ் குமார், 2 கோடி ரூபாய் கொடுக்க சம்மதித்துள்ளார். விஜய் சிங்லா மற்றும் மகேஷ் குமார் இடையே நடந்த, லஞ்ச பேரம் தொடர்பான தகவல்கள், சி.பி.ஐ.,க்கு கிடைத்ததும், அவர்கள், சிங்லா மற்றும் மகேஷ் குமாரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதோடு, இருவரின் நடவடிக்கைகளையும் கண்காணித்தனர்.பதவி உயர்வுக்கு லஞ்சமாக பேசப்பட்ட தொகையான, 2 கோடியில், 90 லட்சம் ரூபாயை, முதல்கட்டமாக, விஜய் சிங்லாவுக்கு, கொடுப்பது என, முடிவானது. இதனால், சண்டிகார், பெங்களூரு, மும்பை மற்றும் டில்லியில் உள்ள, சி.பி.ஐ., குழுவினர் உஷாராகினர். நேற்றுமகேஷ் குமார் தன் தூதர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கோயல் மூலம், 90 லட்சம் ரூபாயை, விஜய் சிங்லாவிடம், சண்டிகாரில் உள்ள அவர் வீட்டில் கொடுத்தார். இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள், சிங்லாவையும், கோயலையும் கைது செய்தனர்.இந்த விவகாரத்தில், இடைத்தரகராக செயல்பட்ட மற்றொரு நபரான, மஞ்சுநாத், பெங்களூரில் கைது செய்யப்பட்டார். முகேஷ் குமார், மும்பையில் உள்ள அவரின் வீட்டில் கைதானார்.அத்துடன், லஞ்ச பணத்தை, விஜய் சிங்லாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்ற, கூரியன் கைது செய்யப்பட்டனர். இதனால், கைதானவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், மகேஷ் குமார் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, பல்வேறு ரயில்வே திட்டங்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களையும் கைப்பற்றினர்.இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால், நேற்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கூறியுள்ளதாவது:
பொது வாழ்வில் நான் உயரிய தரத்தையும், நேர்மையையும் பின்பற்றி வருகிறேன். என் முடிவுகளில், யாரும் தலையிட முடியாது. ரயில்வே வாரிய உறுப்பினரின் பதவி உயர்வுக்காக, என் உறவினர் லஞ்சம் பெற்ற விவகாரத்திற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.என் உறவினர்கள் யாரும், என் அலுவலக பணிகளில் தலையிட முடியாது.
நான் எடுக்கும் முடிவுகளில் மாற்றம் செய்ய முடியாது. என் உறவினர், விஜய் சிங்லா குடும்பத்திற்கும், என் குடும்பத்திற்கும் இடையே, எந்த விதமான வர்த்தக தொடர்பும் கிடையாது.
இந்த லஞ்ச விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விரைவாக விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில், பன்சால் கூறியுள்ளார்.இதன்பின், பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேற்று அமைச்சர் பவன் குமார் பன்சால் சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு, 20 நிமிடங்கள் நீடித்தது. அதன்பின், வெளியே வந்த அவர், நிருபர்களிடம் எதுவும் பேச மறுத்து விட்டார். பிரதமருடனான சந்திப்பின் போது, அமைச்சர் பன்சால், தன் பதவியை ராஜினாமா செய்ய செயலர் அந்தஸ்திற்கு இணையான பதவி: ரயில்வே வாரியத்தின் உறுப்பினராக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட மகேஷ் குமார், அதற்கு முன், மேற்கத்திய ரயில்வேயின் பொது மேலாளராக பதவிவகித்தார். ரயில்வே வாரிய உறுப்பினர் பதவி என்பது, மத்திய அரசின் செயலர் அந்தஸ்திற்கு இணையானது.ரயில்வே வாரியத்தில், சமீபத்தில், மகேஷ் குமாருடன், சுபோத் ஜெயின் (இன்ஜினியரிங் பிரிவு), அருணேந்திர குமார் (மெக்கானிக்கல்) ஆகியோரும் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர். போக்குவரத்து பிரிவுக்கான, உறுப்பினர் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை.
தற்போது ரயில்வே வாரிய தலைவராக உள்ள, வினய் மிட்டலின் பதவிக் காலமும், வரும், ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.இதற்கிடையில், 90 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக கைதான, விஜய் சிங்லா மற்றும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் என, மொத்தம் நான்கு பேர், நேற்று டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும், 8ம் தேதி வரை, சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க, சிறப்பு கோர்ட் நீதிபதி எஸ்.கே.சர்மா உத்தரவிட்டார்.குற்றத்தின் தன்மையை பார்க்கையில், சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. இதன்மூலம், லஞ்சப் பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரிய வருவதோடு, உண்மையில் பலன் அடைவோர் யார், சதிகாரர்கள் யார் என்பதும் தெரியவரும், என, நீதிபதி குறிப்பிட்டார்
பெற்றுத் தருவதாக கூறி, 90 லட்சம் ரூபாயை, ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சாலின் உறவினர் லஞ்சமாக பெற்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என, நேற்று அறிக்கை வெளியிட்ட அமைச்சர் பன்சால், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார். அப்போது, பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக