ஞாயிறு, 5 மே, 2013

ஜாமீன் கிடைத்தும்19 ஆண்டுகள் சிறையில் நீதித்துறையின் லட்சணம் பாரீர்

Expressing 'anger and pain' over a woman having been made to languish in jail for close to two decades despite grant of bail, the Allahabad High Court today ordered her immediate release.
The high court also sought details of all such prisoners across Uttar Pradesh who may have remained incarcerated despite being enlarged by a court.
A Division Bench comprising Justice Vinod Prasad and Justice Anjani Kumar Mishra passed the order on an appeal of one Vijai Kumari who had been awarded life sentence in a murder case by an Aligarh court and who continued to be in jail despite the high court having granted her bail in 1994.
- See more at: http://www.indianexpress.com/news/release-woman-who-is-in-jail-for-19-years-despite-bail-allahabad-high-court
 அலகாபாத்: ஜாமீன் கிடைத்தும் உத்தரவாத தொகை செலுத்த முடியாத காரணத்தால் 19 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டிருக்கும் பெண்ணை உடனடியாக விடுதலை செய்ய அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த விஜய்குமாரி என்பவருக்கு கொலை வழக்கு ஒன்றில் விசாரணை நீதிமன்றம் கடந்த 94ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது.  இதை எதிர்த்து விஜய் குமாரி அலகாபாத் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என தனியாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களையும் அப்போது விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், விஜய்குமாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தனியாக நடந்து வந்தது. இந்நிலையில் ஜாமீனில் விடுதலையாக ரூ.50 ஆயிரம் ரொக்க உத்தரவாதம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதை விஜய்குமாரி குடும்பத்தாரால் செலுத்த முடியவில்லை. இதனால் ஜாமீன் கிடைத்தும் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பீல் வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்தன.
< இந்நிலையில் விஜய்குமாரி சார்பாக கடந்த மாதம் அலகாபாத் ஐகோர்ட்டில் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் வினோத் பிரசாத், அஞ்சனி குமார் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் விசாரித்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். விஜய்குமாரியை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டனர். உ.பி. சிறைகளில் ஜாமீன் கிடைத்தும் உத்தரவாதம் செலுத்த முடியாத காரணத்தால் விடுதலை செய்யப்படாமல் இருக்கும் கைதிகள் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்த செஷன்ஸ் கோர்ட் நீதிபதிகளுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. ஆண்டுதோறும் சிறைகளுக்கு சென்று கைதிகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தி வரும் மாவட்ட நீதிபதிகளும், மாஜிஸ்திரேட்டுகளும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளது..tamilmurasu.org

கருத்துகள் இல்லை: