மத்திய
அமைச்சர் பதவியில் இருந்து பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தார். பிரதமர்
மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்பையடுத்து தனது
பதவியை ராஜினாமா செய்தார் பன்சால்.
பன்சால்
உறவினர், ரயில்வேயில் பணிபுரியும் ஒருவரிடம் உயர் பதவி வாங்கித் தருவதாக
கூறி பேரம் பேசி, அதில் முன்பணம் வாங்கியதில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பன்சால் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் பதவி விலக வேண்டும்
என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கினர்.
இதையடுத்து
அவர் பதவி விலகும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின்
உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் அவர் கலந்துகொள்ளவில்லை.
இதனால் அந்தக் கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்மோகன் சிங், சோனியா காந்தியை பன்சால் சந்தித்தார், பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக