மாநாடு நடந்த அரங்கிற்குள், முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முதல்வர்கள் வந்து அவரவர் இருக்கைகளில் அமர்ந்து விட்டனர். பிரதமரும், பிரணாப் முகர்ஜியும் மட்டுமே வர வேண்டியிருந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் சிதம்பரம் அரங்கிற்குள் நுழைந்தார். மரியாதை நிமித்தமாக, ஒவ்வொரு முதல்வர்களுக்கு அருகிலும் சென்று, கைகுலுக்கி மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்பும், மரியாதையும் செய்தார்.
தமிழக முதல்வரை சிதம்பரம் வரவேற்பாரா என்ற திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு வரிசையாக ஏறி வந்து கொண்டிருந்த சிதம்பரம், திடீரென பின்வாங்கி முன்வரிசைக்கு சென்று விட்டார்.
சிதம்பரத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் ஒரே ஒரு வரிசை தான் இடைவெளி இருந்தது. பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சிதம்பரம் திரும்பவும் முதல்வரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். முதல்வரோ அமைதியாக அமர்ந்தபடியே இருந்தார். முதல்வருக்கு மிக அருகில் வந்து நின்று கும்பிடு வைத்த பிறகு, முதல்வர் தன் இருக்கையை விட்டு மெதுவாக எழுந்தார். தானும் கும்பிடு ஒன்றை பதிலுக்கு போட்டார். அந்த சமயத்தில் எதிரெதிரே இருவரும் நின்று கொண்டிருந்ததால், கேமராமேன்கள் குரல் கொடுத்தனர். பின்னர் இருவரும் ஒன்றாக நின்று போஸ் கொடுத்தனர். இடைவெளி சற்று அதிகமாக விட்டு இருவரும் நிற்பதை கண்டு, அருகில் நிற்கும்படி கேமராமேன்கள் கேட்க, வேறு வழியின்றி இருவரது இடைவெளியும் சற்றே குறைய, சம்பிரதாய சந்தோஷங்கள் இருவரது முகங்களிலும் வெளிவர, பிளாஷ்கள் மின்னின.
முதல்வர் உரை: பெரும் இழுத்தடிப்பு: டில்லியில் நடந்த மாநாடு, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் கூட்டம் என்பதால், மிகுந்த பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. இளம் முதல்வர் அகிலேஷ் யாதவ் தான் முதல் ஆளாக வந்திருந்தார். அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கைந்து வரிசைகள் தள்ளி இருக்கை இருந்தது. அவரும் வந்து அமர்ந்திருந்தார். அருகில், தலைமைச் செயலர், டி.ஜி.பி., உள்துறைச் செயலர் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
முதல்வர்களின் உரைகளை முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு வினியோகிப்பது வழக்கம். அதன்படி, மற்ற எல்லா மாநில முதல்வர்களின் உரைகளையும், அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்களிடம் அந்தந்த மாநில அதிகாரிகள் வழங்கி விட்டனர். தமிழக முதல்வரின் உரை மட்டும் வழங்கப்படவில்லை. "சீல்' வைக்கப்பட்ட ஒரு பெரிய கவர் ஒன்றை கையில் வைத்தபடியே திரிந்து கொண்டிருந்த செய்தி தொடர்பு அதிகாரியிடம் பல முறை கேட்டும் வழங்க மறுத்து விட்டார். உத்தரவு வந்த பிறகே தருவேன் என்றார். பிற முதல்வர்களின் உரைகள் எல்லாம் முன்கூட்டியே வினியோகிக்கப்பட்ட போதும், தமிழக முதல்வரின் உரை மட்டும் தரப்படாமல் மதியம் வரை இழுத்தடிக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், தமிழக முதல்வரின் உரையின் முக்கிய அம்சங்கங்களை, "டைம்ஸ் நவ்' சேனல் மட்டும் முன்கூட்டியே வெளியிட்டவண்ணம் இருந்தது. பிற பத்திரிகைகளுக்கு மட்டும் இழுத்தடிக்கும் அதிகாரிகள், ஆங்கிலச் சேனலுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்பது குறித்து விளக்கம் அளித்தால் பரவாயில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக