காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.
சம்பளம் அதிகம்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வருபவர் அபிஷேக் மனுசிங்வி. சுப்ரீம் கோர்ட் வட்டாரங்களில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் மிகச் சில வழக்கறிஞர்களில், இவரும் ஒருவர்.
கட்சியில் பல செய்தித் தொடர்பாளர்கள் இருந்தபோதிலும், அவர்களில் மிக முக்கியமானவர். மிகச் சிக்கலான பிரச்னைகள் எழும்போதெல்லாம் இவர், தனது லாவகமான பேச்சுத் திறமையை கொண்டு பேட்டியளிப்பார். தவிர லோக்பால் மசோதாவை பரிசீலித்து, வரும் பார்லிமென்ட் நிலைக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
காணவில்லை: ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமை அன்று சிங்வி நிருபர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகவே திங்கட்கிழமை அன்று வராமல் தவிர்த்தார். இந்த சூழ்நிலையில் தான் டில்லி பத்திரிகையாளர் மத்தியில், ஒரு சி.டி., புழங்க ஆரம்பித்தது. ரகசியமாக வினியோகிக்கப்பட்ட அந்த சி.டி.,யில், ஒரு பெண்ணுடன் பல்வேறு ஏடா கூடமான நிலையில் தென்படுகிறார். இது, பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த பெண், சிங்வியோடு பணியாற்றும் ஒரு வழக்கறிஞர் என்றும் சொல்லப்பட்டது.
அரசல் புரசல்: அரசல் புரசலாக பேச்சுகள் கிளம்பியதும், சில தினங்களுக்கு முன் சிங்வி தரப்பில், இந்த சி.டி.,க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தன் ஜூனியர் ஒருவரை விட்டு, இந்த வழக்கை டில்லி ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள சிங்வி, இந்த சி.டி.,யை தடை செய்ய வேண்டுமென்றும் கோரினார். இந்த சி.டி., பொய்யானது. இதில் ஜோடிக்கப்பட்ட காட்சிகள் உள்ளன. எனவே, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும், இந்த சி.டி.,யை வெளியிட தடை விதிக்க வேண்டும். குறிப்பாக, ஆஜ்தக், இந்தியா டுடே, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஊடகங்களில் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று, அதில் குறிப்பிடப்பட்டது. தன்னிடம் பணியாற்றிய டிரைவர் முகேஷ்குமார் லாலுக்கும், தனக்கும் ஏற்பட்ட அதிருப்தியில், இதுபோன்ற பொய்யான சி.டி.,யை தயாரித்து உலவவிடப் பட்டிருக்கிறது.
தடை கோரிக்கை: இது "பிளாக்மெயில்' செய்யும் நோக்கில் வெளியிடப் பட்டுள்ளது. ஆகவே, இந்த சி.டி.,க்கு தடை விதிக்க வேண்டும் என கோரிய, அந்த மனுவை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், இடைக்கால தடையை விதித்துள்ளது.
சமரசம்: இந்த தடை உத்தரவுக்கு பிறகு முகேஷ்குமார் லாலும், அபிஷேக் மனுசிங்வி தரப்பும், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், ஒரு சமாதான முயற்சியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன் விளைவாக திடீரென நேற்று முன்தினம், டிரைவர் முகேஷ்குமார் லால் தரப்பில் கோர்ட்டில், தானாகவே முன்வந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் அந்த டிரைவர், "சிங்வியிடம் நான் பணியாற்றினேன். அவர் என்னை நடத்திய விதம் சரியில்லை. அவருக்கு பாடம் புகட்டவும், பழி வாங்கவும் முடிவு செய்தேன். அதன்படி, பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா நகரில், இந்த சி.டி.,யை நான் தான் தயாரித்தேன். இது பொய்யானது தான். கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர் சிங்வி. ஆனால், அவரிடம் பணியாற்றும் எனக்கோ மிகவும் குறைவான ஊதியத்தை மட்டுமே வழங்கி வந்தார். சம்பள உயர்வு கேட்டு பார்த்தும் பலனில்லை. பாதிக்கப்பட்ட நான் வேறு வழியின்றி சிங்வியை களங்கப்படுத்திட, இதுபோன்ற காரியத்தை செய்தேன் 'என்று, விளக்கம் அளித்துள்ளார். இம்மனு, கோர்ட்டின் பரிசீலனையில் தற்போது இருந்து வருகிறது.
நீக்கம்: காங்கிரசின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிங்வியை மையமாக வைத்து, புயலை கிளப்பியுள்ள விவகாரத்தினால், காங்கிரஸ் ஆடிப்போய் உள்ளது. இந்த சர்ச்சை வெடித்தவுடன் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சிங்வியை, சத்தமில்லாமல் நீக்கியும் உள்ளது. இந்த விஷயம் குறித்து, கட்சியின் மேலிட வட்டாரங்கள் கூறுகையில், "இந்த சி.டி., விவகாரம் கட்சிக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது தான். என்ன செய்ய. முக்கிய தலைவர்களே இதுபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்வது கவலையளிக்கிறது,' என்றன.
எப்போ வருவாரோ, ஏது சொல்வாரோ? சி.டி., சர்ச்சையில் சிக்கிய அபிஷேக் மனுசிங்வி, கடந்த சில நாட்களாகவே எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றபோதும், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கிய விஷயமும் கூட பரவலாக வெளிவரவில்லை. இதற்கு முன்பும், ஒருமுறை மனுசிங்வி பதவி நீக்கம் செய்யப்பட்டார். லாட்டரியை தடை செய்ய வேண்டுமென, கேரளாவில் அம்மாநில காங்கிரசார் கடுமையாக போராடிக் கொண்டிருந்த சமயம். அப்போது கள்ள லாட்டரி அதிபர் ஒருவருக்கு ஆதரவாக அபிஷேக் மனுசிங்வி, கோர்ட்டில் ஆஜரானார். இதனால் கோபம் கொண்ட கேரளா காங்கிரசார் கட்சி மேலிடத்தில் முறையிட்டதன் விளைவாக, செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார். பின் பதவி தரப்பட்டது. ஆனால், இம்முறை பலான சர்ச்சையில் சிக்கியுள்ளதால், திரும்பவும் அப்பதவிக்கு எப்போது வருவாரோ என்ற கேள்வியும், பரபரப்பும் டில்லியில் நிலவுகிறது.
- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக