ராமஜெயம் கொலை வழக்கு மற்றும் சென்னையைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் கணேஷ்ராம் கொலை வழக்கு ஆகியவற்றில் நெல்லையைச் சேர்ந்த கூலிப்படைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து திருச்சி மற்றும் சென்னை போலீசார் நெல்லையில் முகாமிட்டுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயத்தை நெல்லையைச் சேர்ந்த கூலிப்படையினர் கொலை செய்திருக்கலாம் என்று திருச்சி போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் நெல்லையில் செயல்பட்டு வரும் சில கூலிப்படையினர் தலைமறைவாகியுள்ளனர். இதனால் போலீசாரின் சந்தகேம் வலுத்துள்ளது. இதையடுத்து திருச்சி போலீசார் நெல்லையில் முகாமிட்டு கூலிப்படையினரை ரகசியமாகக் கண்காணி்தது வருகின்றார்கள்.
இதற்கிடையே கடந்த 14ம் தேதி சென்னை மதுரவாயிலில் நகைக்கடை அதிபர் கணேஷ் ராம் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார். அவரது கடையில் இருந்த 80 பவுன் தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த சென்னை போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்த கொலை, கொள்ளையில் நெல்லையைச் சேர்ந்த கூலிப்படைக்கு தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையிலான தனிப்படை சென்னையில் இருந்து நெல்லை சென்றுள்ளது. கொலையாளிகளின் படங்கள் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவர்களைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக