சென்னை, ஏப்.17- அடுக்குமாடி குடியிருப்புகளிலோ, பணிபுரியும் அலுவலகங்களிலோ இப்பொழுதெல்லாம் யாருமே மாடிப்படியை உபயோகிப்பதில்லை.
இதற்குக் காரணம் அனைத்து இடங்களிலும் மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளதால் ஒரு மாடி ஏறவே மின்தூக்கியை உபயோகிக்கின்றனர் பலரும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
இதற்குக் காரணம் அனைத்து இடங்களிலும் மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளதால் ஒரு மாடி ஏறவே மின்தூக்கியை உபயோகிக்கின்றனர் பலரும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
மாடிக்குச் செல்ல படிகளை உபயோகித்தால் உடல்பருமன், இதயநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
ஜிம்மிற்கு சென்று பணம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் மாடிப்படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். மாடிப்படி ஏறும்போது உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றன.
இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து காணாமல் போகின்றன.
கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் எக்ஸலேட்டர், லிப்ட் போன்றவைகளை உபயோகப்படுத்துவதைவிட மாடிப்படிகளை பயன்படுத்தலாம்.
மாடிப்படி ஏறுவதனால் இதயநோய்கள் ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள். இதய தசைகள் பலமடைகின்றன. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
வாரத்திற்கு மூன்று முறை அதாவது 30 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்கினாலே போதும். இதயநோய்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.
மாடிப்படி ஏறி இறங்கினால் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உடல் பருமன் ஏற்படுவதில்லை.
வேலைப்பளுவினால் ஜிம், உடற்பயிற்சி என தனியாக நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள் மாடிப்படி ஏறி இறங்குவதன் மூலம் சிறந்த உடற்பயிற்சி கிடைக்கிறது. இது பிற உடற்பயிற்சிகளை விட ஆபத்தில்லாத உடற்பயிற்சியாகவும் செயல்படுகிறது.
பின்னங்கழுத்து வலி, மூட்டு வலி உள்ளவர்களுக்கு இது பொருந்தாது எனவும் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக