வாஷிங்டன், ஏப். 15- அமெரிக்காவில் மெக் சிகோ நாட்டவருக்கு அடுத்தபடியாக, இந்தி யர்கள் அதிக அளவில் குடியுரிமை பெற்றுள்ள னர். இதுகுறித்து அமெ ரிக்க உள்நாட்டு பாது காப்புத்துறை அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த ஆண்டு, 6 லட்சத்து 94 ஆயிரத்து 193 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட் டது. இதில், 94,783 பேர் மெக்சிகோவை சேர்ந்த வர்கள். இவர்களுக்கு அடுத்த படியாக, இந்தி யாவை சேர்ந்த, 45,985 பேருக்கு அமெரிக்க குடி யுரிமை வழங்கப்பட்டு உள்ளது.
குடியுரிமை பெற்ற தில் இந்தியர்கள் இரண் டாவது இடத்தில் இருந் தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடு கையில், இந்த எண் ணிக்கை குறைவு தான். கடந்த, 2010இல் 61,142 பேரும், 2009இல், 52,889 இந்தியர்களும் அமெ ரிக்க குடியுரிமை பெற்று உள்ளனர்.
கடந்த, 70 ஆண்டு களில் அய்ரோப்பாவை சேர்ந்தவர்கள் அதிக குடியுரிமை பெற்று வந் தனர். தற்போது, ஆசியா வைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் அமெ ரிக்க குடியுரிமை பெறு கின்றனர். இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சகஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக