சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவனைக் கூட்டிக் கொண்டு தலைமறைவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் குமுது. அறிவியல் ஆசிரியையான குமுது, மாணவனுடன் ஓடிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இறுதியில் இருவரும் டெல்லி அருகே பிடிபட்டனர்.
அதைத் தொடர்ந்து குமுது கைது செய்யப்பட்டார். சிறுவனை அரசினர் காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன் பி்ன்னர் தனது வீட்டுக்குத் திரும்ப விரும்புவதாக சிறுவன் கூறவே பெற்றோருடன அனுப்பி வைக்கப்பட்டான. ஆசிரியை குமுது சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அவர் ஜாமீ்ன் கோரி மனு செய்துள்ளார். அதில்,
சிறுவனுக்கு பெற்றோர் மூலம் தொந்தரவு இருந்தது. இதுபற்றி என்னிடம் அவன் கூறுவான். நான் அவனுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவேன். பெற்றோர் பிரச்சினை அதிகமானதால் அவன் தனது வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டான்.
அவனை நான் கடத்திச் செல்லவில்லை. போலீஸ் விசாரித்தபோதும், இதைத்தான் ஆனந்தா கூறியிருக்கிறான். எனவே என் மீது குற்றமில்லை என்பது தெரியும். நான் அவனை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை. விருப்பத்தின் பேரில்தான் வந்தான்.
தற்போது அவன் தனது பெற்றோருடன் போய்விட்டான். விசாரணையும் முடிந்துவிட்டது. எனவே நான் சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியமில்லை. எனக்கு சொந்த மாநிலம் உத்தரபிரதேசம் என்றாலும், சென்னையில்தான் எனக்கு ரேஷன் அட்டை உள்ளது.
எனது குழந்தை சென்னையில் படிக்கிறது. எனது குழந்தையை கவனிக்க வேண்டியதுள்ளது. எனவே எனக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்..
இந்த மனு இன்று நீதிபதி பொன்.கலையரசன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக