டெல்லி: தென்சீனக் கடற்பரப்பில் வியட்நாமுக்குச் சொந்தமான பகுதியில் எண்ணெய் அகழாய்வுப் பணிகளை இந்தியா மேற்கொள்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக் கடல் பரப்பில் எண்ணெய்வளமிக்க பல்வேறு தீவுகள் உள்ளன. இவை அனைத்துக்குமே சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால் புருனே,வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளும் தங்களுக்கும் உரிமை இருப்பதாக கூறி வருகின்றன.
தென்கிழக்கு ஆசிய பகுதியில் தென்சீனக் கடல் விவகாரம் சர்ச்சைக்குரியதாக வெடித்து வருகிறது.
இந்நிலையில் தென்சீனக் கடலில் வியட்நாமுக்குச் சொந்தமான பகுதியில் இந்தியா கடந்த ஆண்டு எண்ணெய் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கு அப்போதே சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. கடந்த மாதமும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்த சீனா தற்போது கடுமையாக எச்சரித்துள்ளது. மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கம்போடியாவில் நடைபெற்ற "ஆசியான்" அமைப்பு உறுப்பு நாடுகளின் கூட்டத்திலும் தென்சீனக் கடல் விவகாரமே முக்கியமானதாக விவாதிக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக வந்திருந்த சீன அதிபர் ஹூ ஜூந்தா இது பற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விவாதித்தாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக