கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 60 லட்சத்துக்கும் மேல் இருசக்கர வாகனங்களை விற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.
நாட்டின் இருசக்கர வாகன உற்பத்தியில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. பிற நிறுவனங்கள் எளிதாக பின்தொடர்ந்து வந்து எட்ட முடியாத உயரத்தில் தற்போது அந்த நிறுவனம் இருந்து வருகிறது.கடந்த ஆண்டு கூட்டணியில் இருந்து ஹோண்டா கழன்று கொண்டதால் தொழில்நுட்ப அளவில் பின்னடைவை சந்திக்கும் நிலையில் ஹீரோ மோட்டோ இருக்கிறது. இருப்பினும், புதிய தொழில்நுட்ப பார்ட்னர்களை பிடிக்கும் முயற்சிகளை ஹீரோ நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஹோண்டா பிரிந்து சென்றாலும் சென்ற நிதி ஆண்டில் நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப். தொடர்ந்து மாதா மாதம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் கடந்த மாதமும் 5,28,290 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இதன்மூலம், சென்ற நிதி ஆண்டில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது ஹீரோ. தனது விற்பனையை தக்க வைத்துக்கொள்ள நம்பிக்கை தரும் விதத்தில் புதிய இருசக்கர வாகனங்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் ஹீரோ இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக