ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ராமஜெயம் கொலை: அடுத்த குறி கே.என்.நேரு? இரண்டு சாத்தியங்கள்!

Viruvirupu,




ஏற்கனவே பரபரப்பில் உள்ள திருச்சியில், “தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது” என்று வெளியான செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலமானவர்களுக்கு அவ்வப்போது கொலை மிரட்டல்கள் வருவது சகஜம்தான். அதுவும் கே.என்.நேரு போன்ற அடிதடி சைடிலும் பரிச்சயம் உடைய அரசியல்வாதி என்றால், சற்று அதிகமாகவே வரத்தான் செய்யும்.
சாதாரண நாட்களில் இதையெல்லாம் சீரியசாக எடுக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று, நிலைமை வேறு. ஏற்கனவே ஒரு கொலை விழுந்துவிட்டது. கொலை செய்யப்பட்ட விதத்தைப் பார்த்தால், உச்சக்கட்ட துன்புறுத்தலின் பின் கொன்றிருக்கிறார்கள். பழிவாங்கல், அதீத வெறுப்பு என்று பல விஷயங்கள் தெரிகின்றன. அப்படி கொல்லப்பட்டவரின் அண்ணன் கே.என்.நேரு.

இதனால்தான், நேருவுக்கு வந்துள்ள கொலை மிரட்டலை சீரியசாக எடுத்திருக்கிறது போலீஸ்.
நேருவுக்கு ஏன் மிரட்டல் விட வேண்டும்? நேரடி விளக்கமாக ஒரு பாஸிபிளிட்டி உள்ளது.
தம்பி ராமஜெயம் கொல்லப்பட்டதற்கு என்ன காரணம் என்று சரியாக இன்னமும் தெரியவில்லை. அது என்ன காரணமாக இருந்தாலும், அதில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று தெரிகிறது. ராமஜெயத்தைக் கொன்றவர்கள் (அல்லது, கொல்வதற்கு ஆள் அனுப்பியவர்கள்) ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அந்தப் பாதிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியது, ராமஜெயம் மட்டுமல்ல; அவருடன் நேருவும் சேர்ந்தே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ராமஜெயத்தை போட்டுத் தள்ளிவிட்டு, அடுத்து நேருவிடம் வரலாம் என்பது அந்த பாஸிபிளிட்டி. (இதை நிச்சயம் நேரு மறுப்பார்)
மற்றொரு பாஸிபிளிட்டியும் உண்டு. இந்த கொலை மிரட்டல் என்பதே இவர்கள் உருவாக்கிய கதை என்பதுதான்அது! அதற்கும் ஐம்பதுக்கு ஐம்பது சான்ஸ் உண்டு.
எப்படியோ, கொலை மிரட்டல் வந்தது என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் இதை பரபரப்பாக விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. நேருவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மதியம் வந்ததாக சொல்லப்படும் மிரட்டல் தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை அறிய போலீஸ் முயற்சி செய்யத் துவங்கிவிட்டது.
அழைப்பு மதுரையில் இருந்து வந்திருக்கலாம் என்று ஒரு பேச்சு திருச்சி காவல்துறை வட்டாரங்களில் அடிபடுகிறது.
மிரட்டல் அழைப்பு வந்தது நிஜமாக இருந்தால், கே.என்.நேரு பீதியடைய நிறையவே காரணங்கள் உள்ளன. நிஜமாக இல்லாவிட்டால்? அதைவிட அதிக காரணங்கள் உள்ளன. (நிஜமான பீதி காரணமாக செட்டப் செய்த மிரட்டல் போன் கால்

கருத்துகள் இல்லை: