புதன், 4 ஏப்ரல், 2012

கனடா திருநங்கை போர்க்கொடி!அழகிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட


நான் ஒரு பெண் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே என்னை மிஸ் கனடாப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கனடாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
அந்த அழகியின் பெயர் ஜென்னா தலக்கோவா. இவர் மிஸ் கனடா போட்டியின் இறுதிச் சுற்று வரை வந்தார். ஆனால் அதற்கு மேல் இவரை அனுமதிக்க முடியாது என்று போட்டியை நடத்தும் டொனால்ட் டிரம்ப் அமைப்பு கூறி விட்டது.
அவர் ஆணாக இருந்து அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர். இயற்கையான பெண் இல்லை. எனவே அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் கூறி விட்டது.
இதனால் கொதிப்படைந்துள்ளார் ஜென்னா. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பாஸ்போர்ட்டைப் பாருங்கள். என்ன போட்டுள்ளது, பெண் என்றுதானே போட்டிருக்கிறார்கள். பிறகு எப்படி நான் ஆணாக முடியும்.
என்னை தொடர்ந்து போட்டியில் அனுமதிக்க முடியுமா, முடியாதா என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும். இதில் நான் வெற்றி பெற்றால் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும் என்றார்.
வான்கூவரைச் சேர்ந்த 23 வயதான ஜென்னா, 19 வயதாக இருக்கும்போது பாலின அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் ஆவார். ஆனால் தான் ஒரு பெண்ணாக பல பிரச்சினைகளை இந்த சமுதாயத்தில் அனுபவித்து விட்டதாக வேதனையுடன் கூறினார்.
ஜென்னாவின் வ்ககீல் குளோரியா அல்லர்ட் கூறுகையில், ஜென்னா ஒரு அற்புதமான, அழகான பெண். அவரை போட்டியில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
அவரது பாலினம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி இருக்கையில் எப்படி டிரம்ப் இப்படி நடந்து கொள்ளலாம்?.
ஜென்னாவை போட்டியில் பங்கேற்க அனுமதிப்பதோடு, இயற்கையாகவே பெண்ணாக பிறந்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறையையும் கூட டிரம்ப் நீக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: