திங்கள், 2 ஏப்ரல், 2012

தூத்துக்குடி-கொழும்பு 19 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து'

தூத்துக்குடி, ஏப்.1: தூத்துக்குடி-கொழும்பு இடையே ஏப்ரல் 19 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என, தூத்துக்குடி வஉசி துறைமுக சபைத் தலைவர் அ. சுப்பையா தெரிவித்தார்.    இதுதொடர்பாக தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:    தூத்துக்குடி-கொழும்பு இடையே கடந்தாண்டு ஜூன் 13-ல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதுவரை 12,202 பேர் பயணம் செய்துள்ளனர். அதன் மூலம் ரூ. 7.8 கோடி உரிமம் கட்டணமாகவும், ரூ. 1.8 கோடி பயணிகள் கட்டணமாகவும் வருவாய் கிடைத்துள்ளது. எரிபொருள் பிரச்னை, தொழில்நுட்பக் காரணங்களால் நவம்பர் 18-ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்தை ஏப்ரல் 19 முதல் மீண்டும் இயக்கத் திட்டமிட்டுள்ளோம்.    இதற்கு முன்னர் இருந்த பயணிகள் கப்பல் 1,044 பேர் பயணம் செய்யும் அளவுக்கு பெரியதாக இருந்தது. ஆனால் இப்போது, போக்குவரத்தை தொடங்கவுள்ள சிறிய கப்பலில் 450 பயணிகள் பயணம் செய்யலாம்.    செவ்வாய், வியாழன்தோறும் இந்தக் கப்பல் இயங்கும் என்றார் அவர்

கருத்துகள் இல்லை: