சென்னை: ஐபிஎல் 5 தொடக்க விழாவில் வழக்கம் போல ரகளையாக வந்தார் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். லாரியில் ஏறி வந்த அவர் வித்தியாசமான டான்ஸையும் போட்டு அனைவரையும் குதூகலிக்க வைத்தார்.
சல்மான் கான் என்றால் ரகளை இல்லாமலா...5வது ஐபிஎல் தொடக்க விழாவிலும் அது காணப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் ஒரு திறந்த லாரியில் அவரைக் கூட்டி வந்தனர்.
லாரியில் பல்புகள் சுற்றி வளைத்திருக்க சல்மான் கானின் பிரமாண்ட கட் அவுட்டை வேறு வைத்திருந்தனர். லாரியில், டான்ஸர்கள் சகிதம் வந்த சல்மான் கானைப் பார்த்து அத்தனை பேரும் ஆரவாரித்தனர்.
மேடைக்கு அருகில் வரை லாரியில் ஊர்வலமாக வந்த சல்மான் கான் அங்கிருந்து மேடையேறி டான்ஸை ஆரம்பித்தார். வழக்கமான அதிரிபுதிரியான டான்ஸாக இல்லாமல் சற்றே மென்மையாக காணப்பட்டது சல்மானின் ஆட்டம்.
டபாங் பட பாடலுக்கு அவர் தனது ஸ்டைலில் ஆட்டம் போட்டார். ஆட்டத்தின் இறுதியில் பேட்டைப் பிடித்து பந்தை அடிப்பது போல போஸ் கொடுத்து ஆட்டத்தை முடித்தார் சல்மான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக