சனி, 11 பிப்ரவரி, 2012

Mumbai குண்டுவெடிப்பு 52 பேர் பலியான வழக்கு : கணவன்-மனைவிக்கு தூக்கு

மும்பையில் 2003-ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 52 பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹனீப் சையத் (46), இவருடைய மனைவி பெமீதா சையத் (42), இவர்களுடைய 16 வயது மகள் மற்றும் ஹனீப்பின் உதவியாளர் அஷ்ரத் அன்சாரி (32), லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முகமது அன்சாரி லட்டுவாலா மற்றும் முகமது ஹசன் பேட்டரிவாலா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்பு மீதான வழக்கு விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் மற்றும் பி.டி.கோடே ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு விவாதங்களின் அடிப்படையில் சதி திட்டம், தீவிரவாத செயல் செய்தல் மற்றும் கொலை ஆகிய மூன்று அடிப்படை காரணங்களையும் காட்டி அஷ்ரத் அன்சாரி, ஹனீப் சேக் மற்றும் பெமிதா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை: