போலீஸ் காவலில் உள்ள சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் நேற்றிரவு சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மணல் குவாரி லைசென்ஸ் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்துவிட்டதாக சசிகலாவின் உறவினர் ராவணன் மீது திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்தார். அந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ராவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய குற்றப் பிரிவு போலீஸார் ராவணனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
விசாரணையின்போது தனக்கு திடீரென்று மயக்கம் வருவதாக ராவணன் கூறினார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்கு பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பி.பி. அதிகரித்ததால் மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக