கொலைவெறி போல் உள்ள பாடல்களால் வந்த வினை.
ஒன்பதாம் வகுப்பு மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், உமாமகேஸ்வரியை சரமாரியாக குத்தினான். முதலில், கழுத்து பகுதியில் வெட்டியதும், ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதில், ஆசிரியையின் கழுத்து நரம்புகள் வெட்டுப்பட்டன. அடுத்து, முகம், வயிறு மற்றும் இடுப்பு என, மொத்தம் ஏழு இடங்களில் குத்தினான். ஆசிரியை உமாமகேஸ்வரி இறந்தார். (இனியும் சினிமா பாடல்கள் இது போல் இல்லாமல் கட்டுப்பாடு விதிப்பது நலம்.)இதில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. தமிழ் நாட்டின் இளைஞர்கள் சினிமா அடிமையாக இருக்க வேண்டும் என்பதில் ஒரு குடும்பம் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த ரசிகர் மன்றங்களில் இருப்பவர்கள் முக்கால்வாசி பேர் குடிசை பகுதிகளிலிருந்து வருபவர்கள் தான், அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களை கொண்டு நடத்தப்படும் ரசிகர் மன்றங்கள் மூலமாக அதிக அளவில் இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் வந்து விடுவார் இப்போ வருகிறார் நாளை வருகிறார் என்று எழுதி ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. தனுஷின் அண்ணன் மனைவி மற்றும் மாமனாரும் சேர்ந்து தமிழ்நாட்டில் இன்னும் சினிமா வெறி குறையாமல் இருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வருகிறார்கள். இதற்கு சூப்பர் நட்ச்த்திரத்துக்கு ரொம்பவே சந்தோஷம். மகளும் தந்தை மீது அவருடையா வெறி பிடித்த ரசிகர்கள் வைத்து இருக்கும் வெறியை தூண்டும் விதமாக காசு கொடுத்து இவருடையா படம் வெளி வந்தாலும் வராவிட்டாலும் இவர் பெயரால் இயங்கும் ரசிகர்களின் வெறி குறையாமல் இருக்க தன்னுடையா தந்தையை TWITTER போன்ற தளங்களில் "தலைவர்" என்றே குறிபிடுகிறார். எதற்கு இவர் தலைவர் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. தன்னுடைய கட் அவுட் மீது பாலபிஷேகம் செய்வதையோ அல்லது ஆடு பலி கொடுபதையோ இந்த மாமனிதர் என்றும் எதிர்த்ததே இல்லை..இதை எல்லாம் நாத்த்திகம் பேசும் இந்த வீரமணி, மு க ஒரு போதும் எதிர்த்ததே இல்லை. இது மாதிரி நமக்கு செய்யலே என்கிற ஏக்கம் தான் மு க வுக்கு. தமிழ் நாட்டின் முதல்வர் காலில் மக்கள் விழுந்த போது ( நான் அதையும் எதிர்க்கிறேன்) அதை பார்த்து கிண்டல் செய்து ஆண்டவனால் காப்பாற்றா முடியாது என்று சொன்னார். ஆனால் இவருடையா ரசிகர் மன்றங்கள் மூலமாக எத்தனை இளைஞர்கள் வேலை செய்யாமல் வெட்டி தனமாக மன்றம் தங்கள் வாழ்கையை தண்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பேச மாட்டார். வாழ்க ஜனநாயகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக