புதன், 8 பிப்ரவரி, 2012

மூடநம்பிக்கை தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு


தர்மபுரி, பிப். 7-கோவில் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் எருக்கம்மாள், சக்கரம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை குடமுழுக்கு நடந்தது.
இதை தொடர்ந்து குரு பூஜை மற்றும் கங்கா பூஜைகள் நடந்தன. இதில் லளிகம், நார்த்தம்பட்டி, அப்பனஅள்ளிகோம்பை, சிக்கம்பட்டி, ஆட்டுத் காரம்பட்டி, பெல்ரம்பட்டி, பெலமாரஅள்ளி, சொரக்கப்பட்டி, முதலப்பட்டி, கரகூர், பாகல் பட்டி, தின்னப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்கள் கலந்து கொண் டனர். இந்த விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் சாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அப்போது விரதமிருந்த பக்தர்கள், மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். சாமியாடியபடி வந்த பூசாரி, பக்தர்களின் தலையில் ஆவேசத்துடன் தேங்காயை உடைத்தாராம். முட்டாள்தனத்திற்கும், மூடநம்பிக் கைக்கும் அளவில்லாமல் போய்விட்டது

கருத்துகள் இல்லை: