ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை அவர் ‘ஒரு கை’ பார்க்காமல் விடுவதாக இல்லை.www.Viruvirupu.com
கர்நாடகா அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம் ஒன்றைச் செய்திருக்கிறார் மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா. இவரது இந்தச் செய்கை அவர்களுடைய லோக்கல் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது தமிழகத்துக்கு முக்கிய செய்தியல்ல. ஆனால், தமிழகத்தின் முக்கிய வழக்கு ஒன்றுக்கு முக்கிய செய்தி.
அந்த வழக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் உடன்பிறவா சகோதரி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசிக்கு (பேசாமல் இவருக்கும் ஒரு டைட்டில் கொடுத்திருக்கலாம்) எதிராக பெங்களூவில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு!
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் வழக்கு விஷயத்தில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர் இந்த ஆச்சார்யாதான். முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக கோர்ட்டுக்கு வந்தேயாக வேண்டும் என்று பிடிவாதமாக நின்று, அவரை கோர்ட் படியேற வைத்தவரும் இதே ஆச்சார்யாதான்!
சரி. விவகாரம் என்ன? ஆச்சார்யா தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில், தமிழகத்தில் ஒரு தமாஷ் நடந்திருக்கிறது. சில மீடியாக்கள், “ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடிய அரசு வக்கீல் ஆச்சார்யா ராஜினாமா!” என்று கேப்பட்ட ஆச்சரியக் குறிகளுடன் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன. அரசு வக்கீல் என்று இவர்கள் குறிப்பிடுவது, பப்ளிக் பிராசிகியூட்டர் என்ற பதவியை.
டெக்னிக்கலாக பார்த்தால், மேலே குறிப்பிட்ட தலைப்பில் தவறு ஏதுமில்லை. பப்ளிக் பிராசிகியூட்டராக உள்ள ஆச்சார்யா, ‘ஒரு பதவியை’ ராஜினாமா செய்திருப்பது நிஜம். ஆனால், அந்தப் பதவி, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடும் பப்ளிக் பிராசிகியூட்டர் பதவியை அல்ல. அட்வகேட் ஜெனரல் பதவியை!
ஆச்சார்யா கடந்த ஆண்டு (2011) ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக அரசால் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மாநிலத்தின் சட்டத்துறையில் உயர்ந்த, கௌரவமான பதவி இது.
அதற்கு முன், 2004-ம் ஆண்டில் இருந்தே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பப்ளிக் பிராசிகியூட்டராக வாதாடி வருகிறார். சமீபத்தில், “ஒரு நபர் இரு பதவிகளையும் வைத்திருக்க முடியாது. இதனால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் பப்ளிக் பிராசிகியூட்டர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்” என்று அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அட்வகேட் ஜெனரல் பதவியை காப்பாற்றிக்கொள்ள, பப்ளிக் பிராசிகியூட்டர் பதவியை அவர்
ராஜினாமா செய்து விடுவார் என்பதே அழுத்தத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், இந்த இடத்தில்தான் எதிர்பாராத ட்டுவிஸ்ட்! “சரிதான் போய்யா” என்று அட்வகேட் ஜெனரல் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு, பப்ளிக் பிராசிகியூட்டர் பதவியைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார் ஆச்சார்யா!
இந்த விவகாரத்தில் சிறியதாக ஒரு அரசியல் பிளாஷ்பேக் பார்க்கலாமா? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யாதான் அரசுத் தரப்பின் ஸ்ட்ராங்ஹோல்ட் ஃபிகர். 2010 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை இந்த வழக்கில் யாருக்கும் இன்ட்ரஸ்ட் கிடையாது.
2010 மே மாதம் ஜெயலலிதா அமோக வெற்றியடைந்து முதல்வரானார். அதன்பின் இந்த வழக்கும் லைம் லைட்டுக்குள் வந்தது.
கர்நாடகாவில் நடப்பது பா.ஜ.க. ஆட்சி. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு ஜெயித்தவர். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, தனி பெரும்பான்மை இல்லாத கூட்டணி அரசு.
அடுத்த 2 வருடங்களில் மத்தியில் அமையப்போகும் புதிய அரசை காங்கிரஸ் அமைத்தாலென்ன, பா.ஜ.க. அமைத்தாலென்ன, அதுவும் கூட்டணி அரசாக அமையவே சான்ஸ் அதிகம்.
இப்படியான நிலையில், பா.ஜ.க.-வின் கனவுக் காட்சி சீனில் பாட்டு எப்படியாக இருக்க முடியும்? “டக்..டக்..டக்..டக்.. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..”
ஹீரேயினிடம் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யும் விதமாக, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஆச்சார்யாவை தூக்க நினைத்திருக்கலாம் கர்நாடக அரசு. அதற்காகவே அவருக்கு அட்வகேட் ஜெனரல் பதவியை கொடுத்திருக்கலாம். பெரிய பதவி கிடைத்ததும், அவர் சிறிய பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்திருக்கலாம்.
அவர் அப்படிச் செய்யவில்லை.
உடனே, ஒருவருக்கு ஒரு பதவிதான் என்று அழுத்தம் கொடுத்திருக்கலாம். கௌரவம் மிக்க அட்வகேட் ஜெனரல் பதவியை தக்க வைத்துக்கொள்ள, மற்றைய பதவியை யாரும் உதறிவிடுவார்கள் என்பது ஆப்வியஸ்.
ஆனால், ஆச்சார்யா அவர்களுக்கு ஆன்டி-கிளைமாக்ஸை ஏற்படுத்தி அதிர வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடும் ‘ஒப்பீட்டளவில்’ சிறிய பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, அதைவிட பெரிய பதவியான அட்வகேட் ஜெனரல் பதவியை உதறியிருக்கிறார் ஆச்சார்யா.
அதன் அர்த்தம், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை அவர் ‘ஒரு கை’ பார்க்காமல் விடுவதாக இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக