செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன்



Velmurugan
சேத்தியாதோப்பு: உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ். கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாரா? இந்த உண்மைகளைச் சொன்னால் அவருக்கு சுடுகிறது என்று கூறியுள்ளார் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்.கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில்,
ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழர் வாழ்வுரிமை கட்சி துவக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வன்னியர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி, 25 ஆண்டுகளாக, பா.ம.க.,வை நம்பி வந்தவர்கள், நடுத்தெருவில் நிற்கும் நிலையை, பொதுக்குழுவில் பேசியதற்காக, என்னை வெளியே அனுப்பிவிட்டனர்.

மாதத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்து, தொண்டர்களின் உழைப்பையும், தியாகத்தையும் சுரண்டி, 63 குடும்ப உறுப்பினர்களோடு கட்சி முடிந்து விட்டது என்று செயல்படும் ராமதாசின் போக்கையும், தமிழகத்தில் தலை விரித்தாடும் ஊழலுக்கு எதிராகவும், தமிழர் வாழ்வுரிமைக்காகவும் என் கட்சி போராடும்.

தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்து, பா.ம.க., தொண்டர்களை ராமதாஸ் சுரண்டுவதை பற்றி பேசினால், என்னை, பொய்முருகன் என்கிறார் அன்புமணி. நான் பொய் பேசுவதாக கூறும் அன்புமணி, என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?

உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்.

பசுமைத் தாயகம் சார்பில், பா.ம.க., தொண்டர்களை மரம் நடச் சொல்லி, அதை கணக்கு காட்டி, ஐ.நா., சபை மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாரா? இந்த உண்மைகளைச் சொன்னால் சுடுகிறதோ என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: