சனி, 11 பிப்ரவரி, 2012

பிரபு தேவா நயன்தாரா சுந்தரம் தாரா ஏமாற்றியவர்களும் ஏமாந்தவர்களும்


பிரபுதேவாவின் குடும்பத்துக்கு இது போதாத காலம் போலிருக்கிறது...
முதல் மனைவி ரமலத்துடன் விவாகரத்து, நயன்தாராவுடன் திருமணப் பேச்சு, அதைத் தொடர்ந்து காதல் முறிவு... இப்படி பல்வேறு இழுத்தடிப்புகளுக்குள் அந்த நடனப் புயல் சிக்கித் தவிக்க, இப்போது அவரின் அப்பா சுந்தரம் மாஸ்டர் மீதும் ஒரு காதல் புகார் அணுகுண்டு!
சுந்தரம் மாஸ்டர் எவ்வளவு ஃபேமஸோ, அவ்வளவுக்கு பிரபலமானவர் நடன இயக்குநர் தாரா. 20 ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் படு பிஸியாக இருந்தவர். சுமார் 2,000 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றியவர். அமிதாப் தொடங்கி அனில் கபூர், ரித்திக் ரோஷன் என அனைத்து பிரபலங்களையும் ஆட வைத்தவர். அதேபோல், சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என பலருக்கும் நடன இயக்குநராக இருந்தவர். இவர்தான் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத் தின் மீது ‘தன்னைத் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக’ புகார் கொடுத்துள்ளார். ‘தனது பெரிய மகன் முன்னாவுக்கு சுந்தரம் மாஸ்டர்தான் தந்தை’ என்று கூறும் தாரா, அதற்கான ஆதாரங்களையும் நம்மிடம் காட்டினார். அவரிடம் பேசினோம்.
சுந்தரம் மாஸ்டருக்கு ஏற்கெனவே குடும்பம், மகன்கள் இருக்கின்றனர். இப்போது திடீரென புகார் சொல்கிறீர்களே? ‘‘சுந்தரம் மாஸ்டருக்கு முதல் மனைவி நான்தான். எங்கள் சமுதாய மரபுப்படி அவர் கருகமணித் தாலி அணிவித்து அவரின் குடும்ப வழக்கப்படி கடவுளின் சந்நிதியில் மாலையும், மோதிரமும் மாற்றி என்னை மனைவியாக்கிக்கொண்டார். திருமணமான புதிதில் இருவரும் மயிலாப்பூரில் சில ஆண்டுகள் குடும்பம் நடத்தினோம். அப்போதான் எனக்கு முன்னா என்ற மகன் பிறந்தான்.’’

உங்களை சுந்தரம் மாஸ்டர் திருமணம் செய்துகொண்டதற்கும், முன்னாவின் அப்பா அவர்தான் என்பதற்கும் என்னென்ன ஆதாரம் இருக்கிறது?
‘‘என்னை அவர் திருமணம் செய்ததன் ஆதாரம்தான் இந்த முன்னா. அவரோடு இணைந்து பலமுறை புகைப்படமெடுக்க முயன்றேன். அவரோ தவிர்த்தார். ஆனாலும், நான் கர்ப்பமாக இருந்தபோது என்னை இசபெல்லா மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததும் அவர்தான். அம்மா என்ற இடத்தில் எனது பெயரும், அப்பா என்ற இடத்தில் அவரின் பெயரும் எழுதப்பட்டது. அந்த ரிஜிஸ்டரில் அவரே கையெழுத்துப் போட்டுள்ளார். முன்னாவின் மருத்துவச் சான்று, பிறப்புச் சான்று உட்பட அனைத் திலும் சுந்தரம் மாஸ்டரின் பெயர்தான் இருக்கும். அவர்தான் என் கணவர், என் மகனுக்கும் அவரே தந்தை. இதை நிரூபிக்க மகனுக்கு டி.என்.ஏ. சோதனை செய்யக்கூட தயாராக இருக்கிறேன்.’’

இருவருக்கும் எப்போது காதல் ஏற்பட்டது?
‘‘எனக்கு மூன்று வயது இருந்தபோதே என் அப்பா இறந்துவிட்டார். சின்ன வயசிலேயே என் அம்மா என்னை சினிமாவில் சேர்த்துவிட்டார். ‘வீரத்திருமகன்’ என்ற பட த்தில் குரூப் டான்ஸராக நடித்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து உதவி நடன இயக்குநரானேன். நாகேஷ் கதாநாயகனாக நடித்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நானும் சுந்தரம் மாஸ்டரும் இணைந்து பணியாற்றினோம். அப்போது அவரும் மாஸ்டராகவில்லை. அப்போதுதான் அவர் என்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். அவர் கொஞ்சம் சீனியர் என்பதால் நான் அவருக்கு மறுப்போ, சம்மதமோ தெரிவிக்கவில்லை. ஒரு நாள் திடீரென எங்கள் வீட் டிற்கு பெண்கள் சிலரை அழைத்துக்கொண்டு பழத்தட்டுடன் வந்தவர், என் அம்மாவிடம் என்னைப் பெண் கேட்டார். என் அம்மாவோ, ‘தாரா சின்னப் பெண். இப்போது தான் சினிமாவில் காலூன்றியிருக்கிறாள்’ என்று மறுத்துவிட்டார். அவரோ விடுவதாக இல்லை. தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நச்சரித்தார். இல்லையென்றால், செ த்துவிடுவேன் என்றும் சொல்வார். ஒரே தொழிலில் இருப்பதால் என்னால் அவரை ஒதுக்கிவிடவும் முடியவில்லை. கடைசியில் நானும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவி த்தேன். அப்போதுதான் அவர் மாஸ்டராகி இருந்தார். ‘எனவே திருமணம் செய்துகொள்வது வெளியில் தெரிந்தால் பட வாய்ப்புகள் குறையும். கொஞ்ச நாட்கள் கழித்து வெளியுலகிற்கு அறிவிக்கலாம்’ என்றார். அதற்கும் சம்மதித்தேன். கடைசியில், கடவுள் சந்நிதானத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் மரபுப்படி கரு கமணித் தாலியை என் கழுத்தில் அணிவித்தார்.’’

அப்புறம் ஏன் இருவரும் பிரிந்தீர்கள்?
‘‘திருமணத்துக்குப் பிறகு மயிலாப்பூரில் வசித்தபோது முன்னா பிறந்தான். அவனுக்கு நான்கு வயதாகும் வரை சுந்தரம் மாஸ்டர் என்னுடன்தான் இருந்து வந்தார். அடிக்கடி அவர், அவரின் சொந்த ஊரான மைசூர் பக்கத்திலுள்ள மோகூருக்குச் சென்று வருவார். ஒருமுறை அவர் ஊருக்குச் சென்று வந்தபோது, ‘ஊரில் என்னைக் கட்டாயப்படு த்தி திருமணம் செய்து வைத்தார்கள். அதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. நான் உன்னிடம் இருந்து ஒருபோதும் பிரியமாட்டேன்’ என்று சத்தியம் செய்தார். அதன் பிறகு, அவர் என் வீட்டில் சில நாட்கள், அந்த வீட்டில் சில நாட்கள் என மாறி மாறித் தங்கினார். நானும் அமைதியாகவே இருந்துவிட்டேன். இந்த நிலையில், நான் சினிமாவில் மாஸ்டராகி, இந்தி, தமிழ், தெலுங்கு என எல்லாப் படங்களிலும் பிஸியானேன். அந்த சமயத்தில், சுந்தரம் என் வீட்டிற்கு வருவதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டார். கொஞ்ச நாளில் அவர் வருவதே இல்லை. நான் அவரை தேடிச் சென்று பார்த்தும் அவர் என்னைத் தவிர்த்துவிட்டார். நானும் விட்டுவிட்டேன்.

இந்த நிலையில், என் மகன் முன்னாவுக்கு 40 வயது முடிந்துவிட்டது. ‘தனது அப்பா சுந்தரம் மாஸ்டர்’ என்பதை வெளியுலகுக்குத் தெரிவிக்க தொல்லை கொடுக்கிறான். இத்தனை ஆண்டுகள் நான் மறைத்து வைத்த விஷயத்தை இப்போது மறைக்க முடியவில்லை. எனவேதான், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதுமட்டுமின்றி, ‘எனது தந்தை சுந்தரம் மாஸ்டர்தான்’ என்பதை அறிவிக்கக் கோரி முன்னாவும் தனியாக ஒரு வழக்கைப் போட்டுள்ளான்.

எனது வழக்கு சம்பந்தமாக இதுவரை சுந்தரம் மாஸ்டரை ஐந்து முறை நீதிமன்றத்திலிருந்து கவுன்சிலிங்குக்கு வரச்சொல்லியிருந்தார்கள். அவர் வரவில்லை. எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். என் வாழ்க்கைதான் எப்படியோ ஆகிவிட்டது. ஆனாலும், சுந்தரம் மாஸ்டருக்குப் பிறந்த முன்னாவின் வாழ்க்கையாவது அசிங்கப்படாமல், சீரழியாமல் இருக்கவே இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளேன்.’’

அதன் பிறகு உங்களுக்கும், அவருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையா?
‘‘எந்தத் தொடர்புமே இல்லாமல்தான் இருந்தது. ஆனால், 2005-ம் ஆண்டு திடீரென ஒன்றரை லட்ச ரூபாயை ஒருவர் மூலமாக கொடுத்தனுப்பினார். அவ்வளவுதான். பிறகு மீண்டும் தொடர்பு எதுவுமில்லை.’’

இத்தனை ஆண்டுகள் கழித்து நீங்கள் புகார் சொல்வதைப் பார்த்தால் உள்நோக்கம் இருக்கிறதோ?
‘‘உள்நோக்கமும் இருக்கிறது; உண்மையும் இருக்கிறது. நான் என் வாழ்க்கைக்காக இப்போது வெளியில் வரவில்லை. 40 வயதாகிவிட்ட எனது மகனுக்காகத்தான் இந்த உண்மைகளை வெளியில் கொண்டுவருகிறேன். இதில் ஒரு வார்த்தைகூட பொய்யோ, கற்பனையோ இல்லை. என் மகனின் பிறப்பு ஆவணங்கள் அனைத்திலும் தந் தையாக சுந்தரம் மாஸ்டரின் பெயர்தான் இருக்கிறது. இப்போது குற்றச்சாட்டை சொல்லவேண்டும் என்பதற்காக யாராவது 40 ஆண்டுகளுக்கு முன் ஆவணங்களைத் தயார் செய்வார்களா? அதுவும் அப்போது சுந்தரம் மாஸ்டர் அவ்வளவு பெரிய மனிதரும் இல்லை. நானும் அன்னக்காவடியும் இல்லை. இது என் மகனுக்கான உரிமைப் போராட்டம். அவ்வளவுதான்’’ என்றார் தாரா.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்தறிய சுந்தரம் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் வீட்டை காலி செய்துகொண்டு போய்விட்டதாகக் கூறினார்கள். அவரின் செல்போனிலும் பலமுறை தொடர்புகொண்டும் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் தரப்பில் விளக்கம் கொடுத்தால் நாம் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்!
இன்னொரு மகன்
சுந்தரம் மாஸ்டருடனான உறவு துண்டிக்கப்பட்ட பின் சினிமாவில் பிஸியாகிவிட்டார் தாரா. அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த பிரசாத் என்பவருக்கும் தாராவுக்கும் தொடர்பு ஏற்பட, இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். அந்த மகன் இப்போது அமெரிக்காவில் பணியாற்றுகிறார்.
படங்கள் : ஞானமணி
தேவிமணி

thanks kumudam + sankari alaska

கருத்துகள் இல்லை: