திங்கள், 6 பிப்ரவரி, 2012

யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்- அமெரிக்காவில் தீவிர சிகிச்சை!


Yuvraj Singh
டெல்லி: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுரையீரல் கட்டி காரணமாக சிகிச்சை பெற ஒரு மாதத்துக்கு முன்பு யுவராஜ் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், யுவராஜ் சிங்கிற்கு இருப்பது நுரையீரல் கட்டி அல்ல புற்றுநோய் என உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து தற்போது போஸ்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.யுவராஜுக்கு நுரையீரலில் கட்டி இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இதனால்தான் அவர் சமீப காலமாக விளையாடாமல் இருந்து வருகிறார்.

யுவராஜ் சிங் இதுவரை..

இந்திய அணியின் பல முக்கிய வெற்றிகளுக்கு பேருதவியாக இருந்தவர் யுவராஜ் சிங். 30வயதாகும் யுவராஜ் சிங் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1775 ரன்களை எடுத்துள்ளார்.

274 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8051 ரன்களை எடுத்துள்ளார். யுவராஜ் ஆடிய 20-20 போட்டிகளின் எண்ணிக்கை 23. எடுத்த ரன்கள் 567.

க்டந்த உலகக் கோப்பைப் போட்டியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய யுவராஜ் 362 ரன்களையும் குவித்திருந்தார். 4 போட்டிகளில் மேன் ஆப் த மேட்சாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனால் தொடர் நாயகனாகவும் உருவெடுத்தார்.

எத்தனையோ ஆடுகளங்களை அதிரவைத்த யுவராஜ் இப்போது புற்றுநோய்க்கு எதிராக போராடி வருவது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: