வியாழன், 9 பிப்ரவரி, 2012

இஸ்லாமியர் 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் பழனி முருகன் கோவிலுக்கு


தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வருவார்கள். பலர் கால் நடையாகவே பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பார்கள். பழனிக்கு செல்லமுடியாத சிலர் ஆங்காங்கே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வார்கள்.
இப்படி, பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு இரவில் தங்குவதற்கும், பகலில் சற்று ஓய்வெடுப்பதர்க்கும் வசதியாக வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள முருக பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து கொடுப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம்.
பழனிக்கு அருகில், திண்டுக்கல் செல்லும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டரில் உள்ளது புது ஆயக்குடி என்ற கிராமம். ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.
இந்த கிராமத்தில் இருக்கும் பஜுல் ஹக் என்ற இஸ்லாமியர் கடந்த 15 வருடங்களாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானமும் கொடுப்பதுடன் பகல் முழுவதும் தண்ணீர் பந்தலும் நடத்தி வருகிறார்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த அன்னதானத்திற்கு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை என்று பத்துக்கும் அதிகமான மாவடங்களில் இருந்து வரும் 15,000 முருக பகதர்களை பசியாற வைக்கிறார் 74 வயதான பெரியவர் பஜுல் ஹக்.
ஆம்பூர் பிரியாணி, வேலூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என்று அசைவ உணவான பிரியாணியை சிறப்பாக செய்யும் இந்த இஸ்லாமியர், தைப்பூசத்துக்கு பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்காக முழுக்க முழுக்க சைவ சமையல் செய்து வரும் நாட்டுக்கோட்டை சமையல்க்காரர்களை மட்டுமே வைத்து சிறப்பான சைவ உணவை தயாரித்து வழங்கி வருகிறார்.
பழனி பாபாவின் நெருங்கிய உறவினாறன பஜுல் ஹக் அவர்களும், அவரது ஊரை சேர்ந்த இஸ்லாமிய பெரியோர்களும், தாய்மார்களும் முருக பக்தர்களுக்கு தங்கள் கைகளாலேயே அன்னதானம் கொடுத்து அவர்கள் சாப்பிட்ட பின்னர் இலைகளையும் எடுத்து சேவை செய்கின்றனர்.
எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே.... மார்க்கம் தான் வேறு... வேறு, மறை ஒன்று தான் என்று கூறிய நபிகள் நாயகத்தின் நன்மக்கள் இவர்கள். சமய ஒற்றுமைக்கு இவர்களை விடவும் சிறந்த எடுத்துகாட்டு இருக்கமுடியாது

கருத்துகள் இல்லை: