திங்கள், 17 அக்டோபர், 2011

யாழ்பல்கலைக்கழக மணவன் தலைமையில் கொள்ளை! நால்வர் கைது.

நேற்று முன்தினம் மிருசுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளையுடன் தொடர்புடையவர்கள் என பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் அவர்களது புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள் என யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை உட்பட சில இணையங்கள் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ் மிருசுவில் பிரதேசத்தில் நேற்றிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுபேர் கொண்ட குழுவினர் கொள்ளையை முடித்துக்கொண்டு செல்லும்போது முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து அவர்களை கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்தும் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஊடகம் ஒன்று சம்பவம் யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவன் தலைமையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது. ஆனால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்தந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டோர் விபரம் வருமாறு

1. தியாகராஜா சுபாஸ்கரன் வயது 34
தேசிய அடையாள அட்டை இலக்கம் 771374855V
வித்தியாசாலை சந்தி
வல்வெட்டித்துறை
இவர் 8 வருடங்கள் கொழும்பில் நிறுவனம் ஒன்றில் கடமைபுரிந்தவர் என்பதும் சிங்களம் சரளமாக பேசக்கூடியவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2.தியாகராஜா பார்த்தீபன்
பிறந்த திகதி 11/10/1986
கோவிலடி வீதி
நாவந்துறை
யாழ்ப்பாணம்
நாகரத்தினம் சஞ்ஜீவன்
தேசிய அடையாள அட்டை இலக்கம் 881758620V
யாழ்ப்பாணம்
இவர் யாழ்பாணத்தில் மெக்கானிக்காக வேலை செய்துவரும் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் 3ம் ஆண்டு மாணவனாவார்.
கணேஷ் சுதாகரன்
தேசிய அடையாள அட்டை இலக்கம் 862081765V
மானிப்பாய்
யாழ்பாணம்
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றிரவு 9.30 மணியளவில் உசன் வடக்கு, மிருசுவிலில் உள்ள துரைசிங்கம் உதயதர்சினி எனும் பெண்ணொருவரின் வீட்டினுள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுபேர் கொண்ட குழு ஒன்று நுழைந்தது, தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என அறிமுகப்படுத்தியதுடன் பிரதேசத்திலுள்ள புலி ஆதரவாளர்கள் மற்றும் படையினரிடம் புனர்வாழ்வு பெற்று வெளியேறியுள்ளோர் தொடர்பான தகவல்களை திரட்டவந்துள்ளதாக கூறி அடையாள அட்டைகள் மற்றும் ஆவனங்களை சோதனையிட ஆரம்பித்து சிறிதுநேரத்தில் தாம் கொண்டுவந்த பையிலிருந்த கூரிய கத்தியொன்றை எடுத்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த அனைவரையும் கத்திமுனையில் மிரட்டி வைத்திருக்க ஏனையோர் வீட்டிலிருந்த தங்கச் தங்கச்சங்கில் , மோதிரம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை அபகரித்து கொண்டு அபகரித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இவர்கள் ஒடத்தொடங்கியதும் வீட்டுக்காரர்கள் கூக்குரல் கிளப்ப அயலவர்கள் கூடி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரைத் தவிர முச்சக்கர வண்டியையும் அதில் பயணித்த நால்வரையும் மடக்கிப்பிடித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவன் எனவும் மூவர் சரளமாக சிங்களம் பேசக்கூடியவர்களாக இருப்பதாகவும் தெரியவருகின்றது.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இவர்கள் மீது விசாரணைகள் தொடர்கின்றன.
இவர்கள் கொள்ளையில் ஈடுபடும்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் பெயரினை பயன்படுத்தியதன் பின்னணி தொடர்பாகவும் இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகின்றது. இராணுவத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுவோர் இவர்களது பின்னணியில் இருக்கவேண்டும் எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
தமிழர் பிரதேசத்தில் இடம்பெறும் இவ்வாறான சமூகவிரோத செயல்களை ஊடகங்கள் திரிவுபடுத்தி அதனை இராணுவத்தினர் மீதும், பிற சமூகத்தினர் மீதும் குற்றஞ்சுமத்துகின்றபோது குற்றவாளிகள் தப்பித்து விடுவதுடன் அவர்கள் சமூகத்தால் தண்டிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றனர்.
இவ்வாறே இச்செய்தி சில இணையங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவன் சிங்கள மாணவன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மாணவனின் புகைப்படம் கைது செய்யபட்டுள்ளோர் அனைவரதும் புகைப்படங்களை பிரசுரிப்பதற்கான முழு முயற்சியையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இலங்கைநெற்

கருத்துகள் இல்லை: