பல கதைகளை கேட்டிருப்போம் படித்திருப்போம். ஆனால் ’அரவான்’ 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாதரண மக்களுடைய வாழ்க்கை மற்றும் மறைக்கப்பட்ட மனிதனுடைய வரலாற்றை சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் மரியாதைக்குறிய இயக்குனர்களில் ஒருவரானார் வசந்தபாலன்.
எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ’காவல் கோட்டம்’ என்கிற நாவலை தழுவி எழுதப்பட்ட திரைக்கதை தான் அரவான்.
எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ’காவல் கோட்டம்’ என்கிற நாவலை தழுவி எழுதப்பட்ட திரைக்கதை தான் அரவான்.
அரவான் படத்தை வசந்தபாலன் இயக்க அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இப்படத்திற்கு தற்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்துகொண்டிருக்கிறது. அது முடிந்ததும் படத்தை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பார் டி.சிவா. வெயில், அங்காடித் தெரு வெற்றிக்கு பிறகு வசந்தபாலன் இயக்கும் படம் அரவான்.
இப்படத்தை பற்றி இயக்குநர் வசந்தபாலன் பேசிய போது, வெயில், அங்காடித் தெரு போன்ற சிறிய படங்களை இயக்கினேன். ஆனால் இது போன்ற வரலாற்று படங்களை ஆரம்பிக்கும் போது ரொம்ப சாதரணமாக நினைத்தேன். போகப் போக இதற்கு ஆகும் செலவுகளை பார்த்து மிரண்டுபோனேன். ஒரு குதிரை வேண்டுமென்றால் கூட அதை படப்பிடிப்பு தளத்திற்கு எடுத்துவர ஆகும் செலவு எங்களை வியக்க வைத்தது.
ஆனால் எந்த தயக்கத்தையும் காட்டாமல் படத்தை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முடித்துகொடுத்திருக்கிறார் சிவா சார், என்று தயாரிப்பாளரை புகழ்ந்தார் இயக்குநர் வசந்தபாலன்.
இதில் நடித்திருக்கும் பசுபதி, ஆதி நடிப்பு மிகச் சிறந்தது. அவர்களுக்கு அடிபடாத நாளே இல்லை. கொளுத்தும் சட்டை எதும் அணியாமல், காடு மலை என பார்க்காமல் நான் சொன்னதையேல்லாம் செய்தார்கள். கமல்ஹாசனுக்கு நிகரான நடிகர் பசுபதி. அவர் இந்த தமிழ் சினிமா என் பயன்படுத்தவில்லை என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

அதே போல் ஆதி, என்னிடம் கதை கேட்டவுடன், அந்த கதாபாத்திரமாகவே மாறி 8 பேக்ஸ்சில் வந்தி நின்றார் அசந்து போனேன். இந்த படம் வெளிவந்ததும் அவர் அடுத்த ஹிருத்திக் ரோஷன் என்ற இடத்தை பெறுவார் என்றார்.
அடுத்ததாக சிவா பேசுகையில்,நான் இதுவரை பதினேட்டு படங்கள் தயாரித்திருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இன்றுதான் பெருமையாக இருக்கிறது. அரவான் போன்ற படத்தை எடுத்ததால்தான் இந்த பெருமை. தமிழகத்தின் வரலாற்றை சொல்லும் படம். இப்படிப்பட்ட படத்தை தயாரித்திருப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக