வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தகவல் வழங்கியவகளைச் தேடி அலையும் புலனாய்வுத்துறையினர்

இந்தியா ரு டேக்கு தகவல் வழங்கிய நபர்களைச் தேடி அலையும் புலனாய்வுத்துறையினர்

இந்திய ருடே என்கின்ற தொலைக்காட்சியில் Inside Sri Lanka`s killing Field எனும் தலைப்பில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்டு பல ஊடகங்களிலும் வெளியாகியிருந்த மற்றும் புலிகள் தமது பரப்புரைக்காக பயன்படுத்தியிருந்த வீடியோக்களை Youtube பில் எடுத்து, மாற்றியமைத்து புதிய தொகுப்பொன்று வெளியிடபட்டிருந்தது.

அத்துடன் குறிப்பிட்ட தொலைக்காட்சியின் ஊடவியலாளர் பிரியம்வதா வன்னி பிரதேசத்திற்கு சென்று அங்கு மக்களிடம் கருத்துக்களை பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததுடன் உருமறைக்கப்பட்ட சிலர் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோமென விவரிக்கும் காட்சிகளும் ஒளிபரப்பப்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட ஒளிபரப்பில் தோன்றியுள்ள நபர்களின் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு காணப்படுகின்றது.
 

இல்லாத கடலில் குதித்தாராம்
இவ்வீடியோவில் தோண்றிய பெண்ணொருவர் தான் தங்கியிருந்த 
இடைத்தங்கல் முகாமில் தாய் ஒருவர் பசிக் கொடுமை தாங்க முடியாமல் தனது குழந்தையுடன் அருகிலிருந்த கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதை தனது கண்களால் பார்த்தாக கூறுகின்றார்.

மேற்படி வெளியீடு முற்றிலும் திட்டமிடப்பட்ட பொய்பிரச்சாரம் என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஒரு நபரது கருத்துக்களே போதுமானதாகும். இலங்கையில் இடைத்தங்கல் முகாம்கள் யாவும் வவுனியாவிலேயே அமைக்கப்பட்டிருந்தது. வவுனியா முகாமிற்கு முன் எங்கு கடல் உள்ளது? இந்தபெண் இலங்கையிலிருந்த இடைத்தங்கல் முகாம்களின் நிலை எவ்வாறிருந்தது? அது எங்கு அமைந்திருந்தது போன்ற விடயங்கள் கூட தெரியாதவராக காணப்படுகின்றார்.
ஆகவே இவர் குறிப்பிட்ட ஊடகத்தினால் திட்டமிடப்பட்ட வகையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படப்பிடிப்புக்காக கொண்டுவரப்பட்ட இலங்கைப்பெண்ணாக இருக்க முடியுமென நம்பப்படுகின்றது.

அதேநேரம் இதே வீடியோவில் தோன்றிய பிறிதொருபெண் அங்கு வந்த இராணுவத்தினர் உள்ளாடைகளையும், மாதவிலக்கு நேரங்களில் பயன்படுத்தும் பொருட்களையும் வழங்கியதாக தெரிவிக்கின்றார்: அவ்வாறாயின் அவசியப் பொருட்களைக்கூட வழங்கியவர்கள் உணவு வழங்கவில்லையா என்பது கேள்வி. அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு மிதமிஞ்சிய நிலையில் அவற்றை அவர்கள் வவுனியாவில் தெருவில் வைத்து விற்பனை செய்தமையை அன்றைய காலங்களில் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தமையை நினைவு கூரலாம்.

குறிப்பிட்ட ஊடகவியலாளர் தான் வன்னி பிரதேசத்திற்கு சென்று மக்களை சந்தித்து கருத்துக்களை பெற்றதாக தெரிவிக்கின்றபோதும், இப்படப்பிடிப்பு இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஓன்று இந்தியாவில் ஒன்று வன்னியில். வன்னியில் வீடொன்றில் வைத்து வீட்டின் உட்புறம், வெளிப்புறம், பின்புறம் என ஒருவீட்டின் மாறுபட்ட இடங்களிலேயே படப்பிடிப்பு இடம்பெற்றுள்ளமை தெளிவாக தெரிகின்றது. இப்படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்ட இடம் அடையாளம் காணப்படும்போது, இதன் பின்னணி நிச்சயமாக வெளிவருமென நம்பப்படுகின்றது.
இல்லாத கடலில் குதித்தாராம்
குறிப்பிட்ட படப்பிடிப்புடன் சம்பந்தப்பட்டிருக்க கூடியவர்கள் எனச் சந்தேகப்படுகின்றவர்களை தேடி வலை விரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறு அவர்கள் அகப்பட்டுவிட்டால் தமது ஊடகத்தின் பிரபல்யத்திற்காகவும் தீய சக்திகளின் தேவைகளுக்காகவும் இம்மக்களை பயன்படுத்தியோரால் அம்மக்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியுமா? ஒரு இராட்சியம் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியமைக்காக வருடக்கணக்கில் சிறை செல்ல வேண்டி ஏற்பட்டால் அதன் பக்கவிளைவுகளுக்கு யார் பதில் சொல்வர்?

குறித்த ஊடகத்தினர் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இருவருடங்களின் பின்னர் வன்னயினுள் நுழைந்த முதலாவது ஊடகவியாளர் பிரியம்வதாவே என தெரிவிக்கின்றனர். ஆனால் இக்கருத்து பொய்யானது எனவும் யுத்தம் முடிவடைந்து சில நாட்களிலேயே சர்வதேச ஊடகவியலாளர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக விரிவான ஆய்வொன்ற லண்டன் பிபிசி ஊடகம் மேற்கொண்டிருந்தாகவும் இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவிக்கின்றார்

கருத்துகள் இல்லை: