செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

வெற்றியை எப்படி ஒரு தோல்வியாக மாற்றலாம்?ஜெயலலிதா கற்று தருகிறார்

ஒரு பெரிய வெற்றியை எப்படி ஒரு தோல்வியாக மாற்றலாம் என்ற டெக்னிக்கை ஜெயலலிதாவிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.  தேர்தலில் பேரு வெற்றி பெற்றதும் தான் நினைத்தது எல்லாம் செய்யலாம் என்ற மமதையில் சமசீர் கல்வியில் கைவைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று தற்போது அவருக்கும் அவரது சோ ராமசாமிக்கும் புரிந்திருக்கும்.
ஜெயலலிதா பதவிக்கு வந்த குறுகிய காலத்திற்கு உள்ளேயே பெரிய சில குழிகளை வெட்டி விட்டார். முதலில் விழுந்தது சமசீர் கல்வி. குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஒரு கல்வி மேட்டுக்குடிக்கு ஒரு கல்வி என்று இருக்கும் அவல நிலையை மாற்றிட உருவாக்கப்பட்ட சமசீர் கல்வி பார்பானுக்கு கசக்குது என்பதால் அதை தூக்கி கடாச முயன்று மூக்குடை பட்டிருக்கிறார்கள்.
 ஒரு லட்சத்தி எழுபதாயிரம் டிவியை மக்களுக்கு கொடுக்காமல் தடுத்து வைத்திருப்பது மிகபெரும் மோசடி. ஏற்கனேவே லட்சக்கணக்கானோர் பயன் அடைந்த ஒரு திட்டம் ஏனையவர்க்கு பொய் சேரவிடாமல் தடுப்பது பெரும் துரோகம். இதன் விலையை விரைவில் ஜெயலலிதா செலுத்துவார். கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணம் போதும் செல்வி ஜெயலலிதாவின் கோபத்தை அது கிளறி எப்பேர்பட்ட நல்ல திட்டமாக இருந்தாலும்  அதை தூக்கி எறிந்துவிடுவார்.
வாக்குப்போட்ட தமிழ் நாட்டு மக்களே சிந்திப்பீர், முடிந்தால்?

கருத்துகள் இல்லை: