செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லியிருப்பார் ஜெயலலிதா: சமச்சீர் வழக்கு தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பதில்


கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லியிருப்பார் ஜெயலலிதா: சமச்சீர் வழக்கு தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பதில்

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின்,
சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்.
இப்படி ஒரு தீர்ப்பு கலைஞர் ஆட்சியில் வந்திருந்தால், கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நாங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வோம் என்றார்.
சட்டமன்றத்திற்கு செல்வீர்களா என்றபோது, எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்வரை நாங்கள் போகப்போவதில்லை என்றார். பாளையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாளை பேருந்து நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு இறங்கி சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு சென்றார். தளபதி!நாம் தேர்தலில் தோற்றதை விட மிகக் கேவலமான தோல்வி ஜெயலலிதாவுக்கு.ஆணவத்தில் ஆடிய அம்மையாரும் அவரது அடிபொடிகளும் இனியாவது அடங்க வேண்டும். இதே போல திமுக மேலே போடப்படுகின்ற பொய் வழக்குகளிலும் தீர்ப்பு வரத்தான் போகிறது.அப்போது இந்த அம்மையார் தனது முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போகின்றார்?.......

.பாரிசிலிருந்து ஞானி. இதுதான் வாய்ப்பு. அடியுங்க. இனி இப்படி வருவது அம்மையாரின் 'தனி' தயவு இருந்தால் தான்.
அட்வான்ஸ் வல்லுத்கள் நெஸ்ட் முதல்வர் இதையே அமுல் படுத்திவிட்டு அடுத்த ஆண்டி மாற்றி இருந்தால் மாணவர்களின் மூன்று மாத படிப்பு வினாயிருக்காது ! வளைந்து கொடுக்க வேண்டிய நேரத்தில் வளைந்து கொடுக்காமல் கம்பாக நின்று மக்களின் கோப புயலில் சாய்ந்து விழுவதுதான் அம்மாவின் வாடிக்கை !

கருத்துகள் இல்லை: