சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது.
'கே.டி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. கே டி என்பது கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என்ற பொருள் வரும் வகையில் இந்த புத்தகத்திற்குப் பெயரிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார்.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப் புத்தகத்தை மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தி.சு.கிள்ளிவளவன் வெளியிடுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக