90 இலட்சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்படும் நெடுந்தீவுத் துறைமுகம்
இலங்கையின் மிகப்பெரிய தீவான நெடுந்தீவை உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் நவீன மயப்படுத்தவுள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நெடுந்தீவுக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(16.07.20110) விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.எதிர்காலத்தில் இந்த துறைமுகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இங்கு 5 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கு துரித படகுச் சேவையை ஆரம்பிப்பதே இவர்களின் அவசர தேவையாகவுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நூறு ஆசனங்களைக் கொண்ட புதிய படகை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், இந்த துறைமுகத்தை 200 மீற்றர் தூரத்துக்கு மேலும் இரண்டு மீற்றர் ஆழமாக்கும் பணியை அமைச்சர் இந்த விஜயத்தின்போது ஆரம்பித்து வைத்துள்ளார்.
உப்புநீரை வெளியேற்றுவதற்கான அணையை புனர்நிர்மாணம் செய்யும் பணியும் அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுக அபிவிருத்திக்கென 90 இலடசம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக