வியாழன், 21 ஜூலை, 2011

இலங்கைப் பணிப்பெண்ணை கொலை செய்தவருக்கு உயிரீட்டு தொகை மன்னிப்பு


இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை கொலை செய்த சவுதி வேலை வழங்குனருக்கு 50 ஆயிரம் சவுதி ரியால் உயிரீட்டுத் தொகையினை பெற்றுகொண்டு மன்னிப்பு வழங்க குறித்த பெண்ணின் குடும்பத்தார் உடன்பட்டுள்ளனர் என இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

36 வயதான பவானிதேவி சின்னையா என்ற இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஜனவரி 19ம் திகதி அவரது வேலை வழங்குனரால் கொலை செய்யப்பட்டார். இம்மாத முற்பகுதியில் அவர் நாடு திரும்ப இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் மரணம் மர்மமானது என வேலை வழங்குனர் கூறியபோதும் விசாரணைகளை அடுத்து அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நடந்தது கொலை என பொலிஸார் உறுதி செய்தனர்.

திருமணமாக குறித்த இலங்கை மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கைப் பணிப்பெண் 2008ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.

நாம் வேலை வழங்குனரின் தந்தையாருடன் தொடர்பு கொண்டு சின்னையாவுடைய குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்க பேச்சுக்களை நடத்தி வேலை வழங்குனரின் தந்தையார் அதற்கு ஒத்துக் கொண்டதாக தூதரக வட்டாரங்கள் சர்வதேச ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ளது.

இதேவேளை அவருக்கு வழங்கப்படாது இரண்டு வருட சம்பள இருப்பான 16,245 ரூபா சவுதி ரியாலையும் வழங்க வேலை வழங்குனரின் தந்தையார் உடன்பட்டுள்ளார். அனைத்து பணங்களும் இலங்கை வெளிவிவகார அமைச்சினூடாக சின்னையாவின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: