ஞாயிறு, 31 ஜூலை, 2011

16 வயது புலி 51 வயது அய்யாவுக்கு அண்ணனாகி பல நாளாகிற்று

புலிகளின் வதை முகாமில் எனது அனுபவங்கள் (தொடர் – 7)
- மணியம்
மீண்டும் கூண்டுக்கு வெளியே
கதவைத் திறந்தவன் முதலில் என்னைக் கொண்டு வந்து விட்ட புலி உறுப்பினன். அவனது கையில் ஒரு அலுமினியச் சட்டி இருந்தது. உள்ளே இருந்தவர்களைப் பார்த்து, “கோப்பையை எடுங்கோடா” என உத்தரவிடும் பாணியில் அவன் உரத்துக் கூறினான். அங்கு ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, மிகவும் நெளிந்து ‘நோய்வாய்ப்பட்டு’ அழுக்குடன் காணப்பட்ட, சில அலுமினியத் தட்டுகளை அங்கிருந்தவர்கள் எடுத்து நீட்டினர். அவன் கொண்டு வந்திருந்த சட்டியிலிருந்த கொத்து ரொட்டியை, கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோப்பைகளில் எடுத்துப் போட்டான். பின்னர் அவாகளை நோக்கி, “புதிசா வந்த ஆளையும் சேத்து சாப்பிடுங்கோ” எனச் சொல்லிவிட்டு கதவை மூட ஆயத்தமானான். அதற்கிடையில் அங்கிருந்தவர்களில் ஒருவர், “அண்ணை குடிதண்ணீர் கொஞ்சம் வேணும்” என கெஞ்சும் பாவனையில் கேட்டார்.  தண்ணீர் கேட்டவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும். வந்திருந்த புலி உறுப்பினனுக்கு 18 – 20 வயதிருக்கலாம். இன்னமும் அவனது மீசையில் சரியாகக் கருமை படரவில்லை. இருக்கும் இடம், ஸ்தானம் காரணமாக, அந்த ஐம்பது வயதுக்காரருக்கு அவன் ‘அண்ணை’யாகியிருந்தான். இந்த அண்ணை விளையாட்டு, உள்ளுக்கை மட்டுமின்றி, வெளியிலும் உலா வருவதை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். (மேலும்) 31.07.௧௧
 

கருத்துகள் இல்லை: