ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஷோபனா, சௌந்தர்யா, ஜோதிகா, வித்யாபாலன் என பலரும் நடித்த சந்திரமுகி கதாபாத்திரம் இப்போது அனுஷ்காவுக்கு



       தெலுங்கில் எடுக்கப்படும் சந்திரமுகி பார்ட் 2-வில் சந்திரமுகியாக நடிப்பவர் அனுஷ்கா. இதில் ஏகப்பட்ட ஹீரோயின்கள் என்றாலும் அனுஷ்காவுக்கு தான் அதிக முக்கியத்துவம். 

மலையாளத்தில் ஷோபனா, கன்னடத்தில் சௌந்தர்யா, தமிழில் ஜோதிகா, இந்தியில் வித்யாபாலன் என பலரும் நடித்த சந்திரமுகி கதாபாத்திரம் இப்போது அனுஷ்காவுக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றி பேசிய அனுஷ்கா, இயக்குனர் பி.வாசு என்ன செய்தாரோ அதை தான் நான் காப்பியடிச்சேன். அவர் இயக்குனர் மட்டும் இல்லை ரொம்ப நல்லாவும் நடிப்பார் என தெரிவித்தார்.

 

தெலுங்கில் அனுஷ்காவுக்கு இரண்டு பெரிய படங்கள் விரைவில் வெளியாகிறது, ஒன்று நாகவல்லி (சந்திரமுகி பார்ட் 2), மற்றொன்று ரகாடா. தமிழில் அனுஷ்காவின் அடுத்த ரிலீஸ் சிம்புவுடன் நடித்திருக்கும் 'வானம்'. இதில் சிம்புவும் அனுஷ்காவும் ஆடிய குத்தாட்டத்தை காண சிம்புவின் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். அடுத்து விக்ரமுடன் 'தெய்வமகன்' படத்தில் நடித்து வருகிறார் அனுஷ். இப்படி தெலுங்கு தமிழ் இரண்டிலும் மார்கெட்டை தக்கவைத்து வருகிறார் அனுஷ்கா.

கருத்துகள் இல்லை: