வியாழன், 2 டிசம்பர், 2010

துணைவேந்தர் முன்பு முழந்தாளிட்டு மன்னிப்புக்கேட்ட ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பதின்மூன்று மாணவர்கள் அப்பல்கலைக்கழக துணை வேந்தரை அவரது அலுவலகத்தில் சந்தித்து அவர் முன்பாக முழந்தாளிட்டு திங்கட்கிழமை மன்னிப்புக்கேட்டுள்ளனர். 
துணைவேந்தருக்கு இடையூறு விளைவித்தது,    பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை குழப்பியது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.    இக் குற்றச்சாட்டுகளால் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அனுராதபுர மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 
இவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.செப்டெம்பர் 15 ஆம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழக விவசாய பீடத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தற்காலிகமாக மூடப்பட்டது.அக்டோபர் 26 ஆம் திகதி மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர்.

கருத்துகள் இல்லை: