திங்கள், 29 நவம்பர், 2010

ஆரம்பகால தமிழ் அமைப்புகள் உயிருடன் இருக்கின்றனவென்றால் விடுதலைப்புலிகளும் உயிருடன் இருந்தேதானே ஆகவேண்டும்...!


(இரா.வி .விஷ்ணு)
ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை மாதம் என்றால் தமிழர் மத்தியில் ஒரு பரபரப்பான மாதமாகவே பார்க்கப்பட்டு வந்தது. தமிழர் மத்தியில் விடுதலைப்புலிகளால் திணிக்கப்பட்ட மாதமென்றும் வைத்துக்கொள்ளலாம். விசேடமாக விடுதலைப்புலிகள் இலங்கையில் முற்றாக அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தேசங்களில் உடைக்கப்பட்டு வலுவிழந்து இருக்கையிலும் இந்த வருடமும் பொதுவாக பல இணையத்தளங்களில் கார்த்திகை மாத நிகழ்வுகள் சென்ற வருடத்தைவிட சற்று ஆதிக்கம் செலுத்தித்தான் இருக்கின்றன.
இலைங்கையில் ஈழப்போராட்ட வரலாற்றில் ஈழம் என்ற பெயருக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்களும் புலிகளே என்பதை பலரும் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.ஈழப்போராட்ட பலியெடுப்பு பொன். சிவகுமாரனில் தொடங்கி வே. பிரபாகரனில் முடிவடைந்திருக்கிறது (முக்கியமானவர்கள் என்ற வகையில் எடுத்துக்காடக்கினேன ).என்றே ஈழத்தமிழர்களும் நம்பியாகவேண்டும் . ஈழம் என்ற பெயருக்காக தமிழர்கள் இன்னும் ஓர் உயிரெனும் பலி கொடுக்கவேண்டுமா என்ற நோக்கிலேயே சில கருத்துகளாக கடுரைஎழுத விளைகிறேன .
தமிழினம் வீரர்கள் என்று புராண இதிகாசங்களில் கூறியதெல்லாம் நேருக்கு நேர் நிறு போரிடுபவர்கள் என்பவர்களைத்தான . களத்தில் நின்று போரை வழிநடத்தி வெற்றிகண்ட ஒரு சிலரை மாவீரர் என்றும் கூறியிருக்கின்றது. போரில் புறமுதுகிட்டு ஓடுவது ,ிராயுதபாணியை தாக்குவது , பின்னாலோ ஒளிந்திருந்தோ தாக்குவதெல்லாம் போரில் கோளைத்தனங்கலாகவே பார்க்கப்பட்டது . அதிருக்கட்டும் இன்றைய நவீன யுத்தம் எந்தளவில் பாரம்பரிய போர்விதிகளை கொண்டு திடமிடப்படுகின்றது என்ற கேள்வி இருக்கின்றத . எனது தனிப்பட்ட கருத்தாக இன்றைய மனிதன் தன்னை வீரன் அல்லது மாவீரன் என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு வீரனாக இருக்கின்றான என்கிற கேள்விருக்கின்றது. எங்கோ தூரத்திலிருந்து செல் வீசுவத , விமானத்திலிருந்து குத்துமதிப்பாக குண்டுவீசுவது , கிளைமோர் வைத்து தாக்குவது , நிராயுத பாணியை ஒட்டிநின்று தாக்குவது , யுத்தமென்றால்  இரவில் ஆரம்பிப்பது அல்லது மறைவான இடத்திலிருந்து தாக்குவது என்று முற்றிலும் நவீன ஆயுதங்களுக்கு கட்டுப்பட்டே எல்லா யுத்தங்களும் நடை பெற்றுகொண்டிருக்கின்றன. இதில் வீரன் யார் மறைந்திருந்து தாக்குபவனா இல்லை சுடும் துப்பாக்கிகளா?  மன்னிக்க வேண்டும் நான் சொல்லவந்தது அமெரிக்கரில் தொடங்கி நவீன ஆயுதங்களை நம்பியும், நேருக்கு நேர் நின்ற  ோரிடாதவனையும் எப்படி வீரன் என்று அழைப்பது? .அல்லது இந்தக்கால மனிதரில் வீரன் என்று மார்தட்டி சொல்ல யாரேனும் வாழ்தார இல்லை வாழ்கிறாரா ? என்ற சந்தேகத்தை தெரிவிர்ப்பதர்க்காகவே அப்படி சொன்னேன .
ஈழப்போராட்டம் பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறது அவர்கள் அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் நினைவு கூறப்படவேன்டியவர்கள் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை உயிர் நீத்த அனைத்து தமிழ் பேசும் மக்கள் அனைவரயும்  தமிழர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும் அது பொதுமகனாக இருக்கட்டும் விடுதலை புலிகளிலிருந்து ஆரம்பகால் போராட்டகுழுக்கள் அல்லது மாற்று ஆயுத குழுக்கள் ,இறுதியாக தோற்றம்பெற்ற தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளில் இருந்து ஈழப்போராட்டம் காரணமாக உயிர் நீத்த அனைத்து உயிர்களும் உறவுகளும் நினைவு கூறப்படவேண்டியவர்களே . இதனை உயிர் இழப்புகளுக்கும் காரணங்கள் பல இருக்கின்றன சகோதர படுகொல , துரோகம் , காட்டிக்கொடுப்பு , சுயலாப படுகொலைகள் , போர்களப்பலி, விபத்து இப்படி எத்தனையோ இருக்கின்றன இவை அனைத்தும்  ஆயுதபோராட்டம் என்றொன்று ஆரம்பித்ததன் பின்னே பலியெடுக்கப்பட்ட உயிர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது . ஒருவன் அல்லது ஒரு தலைவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிய அவனிடம் ஆயுதத்தை அல்லது பதவியை கொடுக்கவேண்டுமேன்பார்கள்.ஒருமிக்  இவ இரண்டையுமே பல அமைப்புகளிடம் எமது சமூக சூழ்நிலைகள் , அல்லது காலம் கொடுத்திருந்தது அவற்றை எமது தமிழ் சமூகமும் , அமைப்புக்களும் எப்படி பயன்படுத்தியிருக்கின்றன என்பது அனுபவ ரீதில் எமக்கு தெரிந்த விடையங்கள் . அவற்றை மீட்டி பார்பதென்றால் அது குப்பையை கிளறுவது போலாகிவிடும் .ஆகவே அமைப்பு ரீதியில் பார்த்தல் யாரை சுத்தமானவராக சொல்லமுடியும்? . ஆகவே இழந்த உயிர்கள் அனைத்தையும் ஒரு வரையறைக்குள்ளேயே அடக்கிவிடுவோமே.. இழந்த உயிர்கள் அனைத்தும் ஈழப்போராட்டத்தில் இழந்த உயிர்களாக மதிக்கப்பட்டு நினைவுகூறவேண்டும்.
இழந்த அனைத்து உயிர்களையும் நினைவு கூறுவதற்கான ஒரு நாளை தமிழ் அரசியல் வாதிகளும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து அரசியல , அமைப்பு வேறுபாடுகளுக்கு அப்பாட்பட்டு  தமிழ் சமூகம் ஒரு தினத்தை பிரகடனப்படுத்தவேண்டும். ஈழப்போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூறவேண்டிய கடமை ஈழப்போரில் தப்பி உயிருடன் இருக்கும் ஒவ்வொரு இலங்கை தமிழர்க்கும் இருக்கின்றத .
இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்ற தமிழ் அமைப்புக்கள் பல விடுதைப்புலிகள் இருக்கிறார்கள் அல்லது இருக்கவேண்டும் என்றும் இல்லை அல்லது இருக்ககூடாது என்றும் விருபுகின்றன. இதில் விடுதைப்புலிகளை முற்றாக அளிக்க முடியுமா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கின்றத . ஆயுத ரீதில் அழிக்கப்பட்டிருக்கிறார்கள் இலங்கையில் இனி அவர்கள் ஆயுத ரீதியில் இயங்குவதற்கு வாப்பே இல்லை என்பது இன்றைய காலகட்டம். அனால் புலிகள் என்ற அமைப்பை உணர்வு ரீதியில் அல்லது அமைப்பு ரீதியில் முற்றாக அளிக்க முடியாது என்பதை புலிகள் என்பவர்கள் இனி இல்லை என்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும . ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் பலம்பெற்றிருந்த ஆயுதம் தாங்கியிருந்த தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இன்றுவரை புலிகளின ,சக அமைப்புகள் , உட்கட்சி முரண்பாடுகள் , இலங்கை அரசாங்கமும் இராணுவமும் என பல சவால்களுக்கு முகம் கொடுத்தி பல உயிர்களையும் , தமது கடமைபுக்களையும் பலவீனப்படுத்திய நிலையிலும் இன்றுவரை அந்த அமைப்புகள் அழிந்திருக்கின்றனவா? அல்லது அளிக்க முடிந்திருக்கின்றதா? குறைந்த பட்சம் உள்ளேன் ஐயா என்று சொலக்கூடிய அளவில் சில அமைப்புகள் வெளிநாடுகளிலும், சில அமைப்புகள் மக்கள் மத்தியிலும் தம் அரசியலையும் செய்துகொண்டு உயிருடன்தான் இருக்கின்றன . அவ்வாறிருக்கையில் கடந்த இரு வருடங்கள் வரை தமிழர் மத்தியில் ஆதிக்கள் செலுத்திய அமைப்பு முற்றாக அழிந்து விடும் என்று எதிர்பார்ப்பது சாதியமாகத்தொன்ற . அப்படியென்றால் மற்ற தமிழ் அமைப்புகள் எப்போதே அழிந்திருக்கவேண்டும . உண்மை என்னவென்றால் தமிழ் அமைப்புகளில் அரசியலை விட உணர்வுகளே உயிராக இருக்கின்றன அகவே உணர்வுள்ள எந்த அமைப்பையும் முற்றாக அழித்துவிட முடியாத .
விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு பழைய கொள்கையுடன் கூடிய அமைப்பாக இலங்கையில் தமிழ் சமூகத்தின் இனி ஒரு போதும் கால் ஊன்றிவிடக்கூடத . அதே போல் தமிழ் சமூகம் இன்னுமொரு ஆயுத போராடம் சம்பந்தமாக சிந்தித்துவிடவே கூடாது .தன்மானம் கா  ுறப்பட்டநாம் அவமானப்பட்டு போராட்டத்தை முடித்திருக்கிறோம் என்பதை தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது . அந்த நாள் மே மாதம்
அரை குறை ஆடையில் சேறு பூசப்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தின் ஆரவாரத்துக்கு மத்தியில  ாட்டப்பட்ட உருவம் வெறும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவம்  மட்டுமல்ல தமிழ் சமூகத்தின் வீரமும் மானமுந்தான் என்பதை கசப்பான அனுபவமாய் தமிழ் சமூகம் பார்த்தே ஆகவேண்டியிருக்கின்றது. ஒருவேளை புலிகளின் தலைவர் மற்றைய தற்கொலைப்போராளிகள் செய்ததை போல தன் உடல் அகப்படாதபடி தற்கொலை செய்து மாய்த்திருந்தால் கூட தமிழ் சமூகத்தின் மானமும் பிரபாகரனின் வீரமும் விமர்சிக்கபடாதபடி வரலாற்றின் பொறிக்கப்பட்டிருக்கும் என ஈழபோரட்ட அனுபவமுள்ள நபர் ஒருவர் கூறியது சரியென்று படுகின்றத .
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருக்கவேண்டுமென்று நினைப்பவர்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு தமிழ் சமூகத்தை இதுவரை காலமும் வழிநத்தியிருக்க கூடாது அல்லது விடுதலைப்புலிகளை தமிழ் சமூகம் இப்படி ஒரு பிழையான வழியில் வழிநடத்தியிருக்க கூடாது என்றும் பலர் உணர்ந்திருப்பார்கள் என நம்புகின்றோம்.எந்த ஒரு ஆயுத போராட்ட குழு தலைவருக்கும் ஏற்ப்படா  ொடூரமா ஒரு நிகழ்வும் புலிகளின் தலைவர் வாழ்வில் நிகழ்திருக்கின்றது . யாழ் பல்கலைகழக மனித யுரிமை அமைப்பின் தகவலின் படியும் சில சுய தகவல் சேமிப்பின் அடிப்படையிலும் பார்த்தால் பல இலச்சம் மக்களின் ஆதரவு பெற்ற நபர் பலம் பொருந்திய ஆயுத பாதுகாப்பில் வாழ்த்த நபர் இப்படிபட்ட ஒரு கொடூர நிலைமையில் தன் குடும்பத்தையுமே இழந்த நிலையில் யாழ்.ப.மனித உயிமை அமைப்பின்அறிக்கையின  தகவலின் படியும் . குமரன் பத்மநாதன் ஊடகங்களில் தெரிவித்த தகவலின் அடிப்படியிலும் பார்த்தால் அவரின் குடும்ப அங்கத்தவர்கள் சிலர் அவர் கண் முன்னாலேயே கொள்ளப்பட்டிருகின்றார்கள . இந்த நிலைமை எந்த மனிதநேய விருபியாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.ஆனாலும் அப்படி ஒரு விடயம் மர்மமான முறையில் நடந்தேறித்தான் இருக்கின்றத . இப்போது இதனை தெரிவிப்பதற்கு காரணம் இனி எமது சமூகத்தில் ஆயுதப்போராட்டம் என்றொன்றை யாரும் நினைத்துக்கூட பார்க்ககூடாது என்பதனை வலியுறுத்தவே. கொலைகள , சூட்சிகள் அது தனி நபருக்காகவோ அல்லது சமூகம் சார்ந்தோ செய்தாலும் பலன் என்பதை தனிப்பட்ட ரீதியில் அனுபவித்தே ஆகவேண்டும் . தமிழ் சமூகத்தில் அண்மைய உதாரணம் பிரபாகரன . அதேபோன்றே சிங்கள  சமூகத்தில் இறுதிப்போர் முனையில் நடைபெற்ற கொடூரங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய சரத்பொன்சேகா இன்று அனுபவித்து கொண்டிருப்பது தான் செய்த பாவங்களுக்கான பலன்களே.பல பேரை  சிறையில் அடைத்த நபர்,முப்படைக்கும் கட்டளையிட்ட நபர் இன்று நான்கு சுவர்களுக்கு மத்தியில் உணவுக்கும் , காலைக்கடனுக்கும் வரிசையில் நிற்கும் நிலையில். (இன்னும் சிலர் இருக்கிறார்களே என்கிறீர்களா?   சிலர் பிரகாரம் செய்து தப்பித்து கொள்ளட்டும் சிலருக்கு காலம் நிச்சயமாய் பதில் சொல்லியே ஆகும ) பாவம் எக்காலத்திலும் பாவமே அது சுயலாபத்துக்காக இருந்தாலென்ன , சமூகம் சார்ந்ததாக இருந்தாலென்ன. இனி ஆயுதம் தூக்க எத்தனிக்கும் நபர் ஒவ்வொருத்தருக்கும் இலங்கையின் ஈழப்போராட்டமே ஒரு உதாரணம் என நம்புவோம் .
இன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசின் செயட்பாடுகளும , கருத்துக்களும் சில திருப்திகரமாக இருந்தாலும் , சில கவலையளிக்க கூடியதாகவும் இருக்கின்றன தமிழர்களாகிய நாம் ஜனநாயக ரீதியில் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று சிந்திப்பதோடு, இந்தியாவின் ஆதரவை தொடர்ந்தும் பேணவேண்டிய தேவையில் இன்றைய எமது தமிழ் சமூகம் இருக்கின்றது. தொடர்ந்தும் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள ஜனநாயக ரீதியிளால போராட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம் நாம்.
தீதும் நன்றும் பிறர் தர வார ........
இரா.வி .விஷ்ணு 

கருத்துகள் இல்லை: