ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ஜெகன்மோகன் ரெட்டி. தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரி்ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை அவர் தொடங்குகிறார்.
இதையடுத்து தனது கடப்பா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மீரா குமாருக்கு பேக்ஸ் அனுப்பினார்.
அவருடன் அவரது தாயார் விஜய்லட்சுமியும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவரும் தனது புலிவந்தலா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து ஆந்திர சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
ஆந்திராவில் முதல்வர் பதவியை எதிர்ப்பார்த்த ரெட்டிக்கு அந்தப் பதவியை காங்கிரஸ் தலைவர் சோனியா வழங்காததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தான் விலகுவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ரெட்டி 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் கட்சி மேலிட கட்டளையை ஒரு போதும் மீறியதில்லை. ஆனால், காங்கிரஸ் மேலிட நடவடிக்கைகள் என்னை புன்படுத்தி உள்ளன. எனவே கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஜெகன்மோகன்,
என் தந்தை மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி என்னை அவமதிக்க தொடங்கியது. ரோசையாவை முதல்வராக்கியதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நான் எதிர்ப்பது போன்ற பிரமையை உருவாக்கினார்கள்.
மேலும் காங்கிரஸ் மேலிடம் என்னை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. சோனியா காந்தியை சந்திக்க பல முறை நேரம் கேட்டும் எனக்கு நேரம் ஒதுக்கவில்லை.
அத்துடன் எனது குடும்பத்துக்குள்ளேயே பிளவை ஏற்படுத்தவும் முயற்சி செய்தனர். இந்த காரணங்களால் தான் காங்கிரசில் இருந்து விலகினேன்.
என் தந்தை ராஜசேகர ரெட்டியயும் காங்கிரஸ் கட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்த சிரஞ்சீவியுடன் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பேச்சு நடத்துவதும் அவரை சந்திப்பதும் கூட்டணி வைக்க முயல்வதும் பெரும் துரோகமான செயலாகும் என்றார்.
ஜெகன்மோகனுடன் அவரது ஆதரவு எம்பிக்கள் சிலரும், சுமார் 30 எம்எல்ஏக்களும் ராஜானமா செய்வர் என்று தெரிகிறது. ஆனாலும் அரசுக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்று தெரிகிறது.
இருப்பினும் ஜெகன்மோகன் ரெட்டியால் ஏற்படும் சரிவை சமாளிக்க நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் ஆதரவைப் பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். சிரஞ்சீவி கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்டிக்கு பாஜக ரகசிய தூது?:
இந் நிலையில் ரெட்டியை தங்கள் பக்கம் இழுக்க பாஜக ரகசிய தூது விடுத்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜகவை தனது கூட்டணியில் மீண்டும் சேர்க்க மறுத்து வருகிறார்.
Read: In English இதையடுத்து ரெட்டியை தங்கள் கட்சிக்குள் அல்லது கூட்டணிக்கு இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இந் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி விலகினாலும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கட்சியிலிருந்து விலக வேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளதாகஅவரது ஆதரவு எம்.எல்.ஏவான ஸ்ரீகாந்த் ரெட்டி கூறியுள்ளார்.
பதிவு செய்தது: 29 Nov 2010 8:04 pm
ஜகன் ஜெயிக்க முடியாது. இவனுக்கு பொறுமை இருந்திருந்தால் அடுத்த அயிந்து வருஷத்தில் முதல்வர் ஆகி இருக்கலாம். இவன் அவசரபட்டுட்டன்னு தோணுது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக