சனி, 4 டிசம்பர், 2010

அடுத்தடுத்து சிக்கல்கள்: காங்கிரஸ் அமைத்த 'டேமேஜ் கண்ட்ரோல்' டீம்!

மத்திய அரசு அடுத்தடுத்து பிரச்சனைகள் சந்தித்து வரும் நிலையில் 'டேமேஜ் கண்ட்ரோல்' செய்ய 15 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம், நிரா ராடியா டேப் விவகாரம், ஆந்திர அரசியல் நிலவரம், பிகாரில் ஏற்பட்ட தோல்வி, மத்திய ஊழல் தடுப்புத் தலைவர் நியமன விவகாரம் என காங்கிரஸ் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுள்ளது.

இந்தப் பிரச்சனைகளை எதி்ர்கொள்வது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அதிகார அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, சோனியாவி்ன் அரசியல் செயலாளர் அகமத் பட்டேல் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில், தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றி காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களை மீடியாக்களில் தெரிவிக்க 15 மூத்த தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, பவன்குமார் பன்சால், ஜெய்ராம் ரமேஷ், செய்தித் தொடர்பாளர்கள் ஜெயந்தி நடராஜன், அபிஷேக் சிங்வி, மணீஷ் திவாரி, ஷகீல் அகமது மற்றும் கிரிஜா வியாஸ், ரேணுகா செளத்ரி, பாப்பர், சஞ்சய் நிரூபம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந் நிலையில் நிருபர்களை சந்தித்த ப.சிதம்பரத்திடம் நீரா ராடியா டேப் உரையாடல் குறித்து கேட்டதற்கு, பெரிய அளவிலான ஊழல் அல்லது வரி ஏய்ப்பு நடக்கும்போது இதுபோல டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படும். ஆனால், அதை பகிரங்கமாக வெளியிடக்கூடாது. ஆனால், சில நேரங்களில் அப்படி வெளியாவதை தவிர்க்க முடியாது.

ஊழல் நிச்சயம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். ஊழல்வாதிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எல்லாவற்றிலுமே ஊழல், எல்லோருமே ஊழல்வாதிகள்தான் என்ற அர்த்தமற்ற பிரசாரத்தை நம்பி நீங்கள் (நிருபர்கள்) ஒரேயடியாக அதில் மூழ்கி விடாதீர்கள் என்றார்.
பதிவு செய்தது: 04 Dec 2010 7:21 pm
ஆகா ஒத்துக்கிட்டாறையா பெரிய அளவில் உழல் என்று அவரை அறியாமலேயே ஒத்துக்கிட்டார்

பதிவு செய்தவர்: தே வ...
பதிவு செய்தது: 04 Dec 2010 7:06 pm
காசுக்காக தன் அம்மாவை கூட்டி கொடுபதற்கும் , காசு வாங்கி கொண்டு நியூஸ் போடுவதும் ஒன்றே .

கருத்துகள் இல்லை: