சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உட்பட அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய புதிய ராணுவ அமைச்சர் கிம் க்வான் ஜின் கூறுகையில், "வடகொரியாவின் இச்செயலுக்கு நாம் இரண்டு மடங்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.அதேநேரம், சியோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வடகொரியாவின் கொடி மற்றும் அதிபர் படங்களை எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
வடகொரியா புதிய மிரட்டல்: இந்நிலையில், வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: கொரியாவின் மேற்குக் கடற்பகுதியில் அமெரிக்கா தன் போர்க்கப்பலை கொண்டு வருமானால், அதன் விளைவுகள் என்ன என்று யாராலும் கணிக்க முடியாது. வடகொரியாவின் தாக்குதலில் இறந்து போன பொதுமக்களை வைத்து தென்கொரியா தீவிரப் பிரசாரம் செய்கிறது. தாக்குதலுக்கு முன், அதிகாலையில் தென்கொரியாவுக்கு போன் மூலம் வடகொரியா நோட்டீஸ் விட்டது. கடைசி நேர மோதலைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுக்கப்பட்ட அந்த நோட்டீசை தென்கொரியா புறக்கணித்து விட்டு, மேலும் மேலும் வடகொரியாவைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சீனா முயற்சி: இவ்விவகாரத்தில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தும் படி சீனாவுக்கு பலதரப்பில் இருந்தும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி, வடகொரியா தூதரை நேரில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அமெரிக்க மற்றும் தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களுடன் போனில் உரையாடினார். இவ்விவகாரத்தில், வடகொரியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, இந்த கூட்டு ராணுவப் பயிற்சி வடகொரியத் தாக்குதலுக்கு முன்பே திட்டமிட்டதுதான் என்று கூறியுள்ளது.அமெரிக்காவுடன் தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள சில மணி நேரங்களே இருந்த நிலையில் வடகொரியா விடுத்துள்ள இச்செய்தியும், சியோலில் நடந்த கடற்படை வீரர்களின் இறுதியஞ்சலி நிகழ்ச்சியும் தென்கொரியாவில் மேலும் பதட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது.
GRK - Delhi,இந்தியா
2010-11-28 09:48:13 IST
கொரியா நாடுகள் பிரிந்த போது தென் கொரியா அமெரிக்காவிடம் பாதுகாப்பு கோரி நாடோ அமைப்பில் சேர்ந்து கொண்டது. அங்கு காலம் காலமாக அமெரிக்க துருப்புக்கள் இருக்கின்றன ..சவுதி அரேபியாவை இராக் தாக்கியபோது அமெரிக்க வேண்டும் ...ஆனால் அமெரிக்காவை குறை சொல்வதை இங்கு உள்ள பலர் fashionaaga நினைகின்றனர் ...சவுதி அரசாங்கம் தான் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா அரசாங்கத்திற்கு அங்கிகாரம் கொடுத்தது ..ஐயோ பாவம் அல்கொய்த பச்சை குழதைகள் என்று பேசிவரும் அறிவீனர்களுக்கு நாம் எதை சொனாலும் புரியபோவதில்லை ...அமெரிக்க போன்ற நாடுகள் இருப்பதால் தான் தலிபான் அல்கொய்த போன்ற தீவிரவாத இயக்கங்கள் கட்டுப்பாட்டில் வைக்க பட்டுள்ளன ...இல்லை என்றால் இந்தியாவை இந்த தீய சக்திகள் துண்டு போட்டு விடும் ..இந்திய சவுதி அராபிய போன்று எந்த விதமான மத சுதந்திரமும் இல்லாமல் ஆகி விடும் ..இந்திய சீனா ரஷ்ய ஜப்பான் அமெரிக்க இஸ்ரேல் ஆகிய நாடுகள் இனைந்து செயல் பட்டால் தான் இந்த தீவிரவாத இயக்கங்களை ஒழிக்க முடியும் ....
தாளைதீன் - பண்டார்,புருனே
2010-11-28 08:51:49 IST
கற்பனையில் உலக ரௌடியாக திமிர்கொண்டு, நிஜத்தில் தலைவரும், மக்களும் பாதுகாப்பு இல்லாவிட்டால் அடுத்த தெருவுக்கு கூட செல்ல முடியாமல் பயந்து வாழும் டுபாகூர் அமெரிக்கா!! போருக்கு சொன்ன காரணம்-(ஆப்கானிஸ்தான்_ஒசாமா) பிடித்தார்களா? (ஈராக்-பேரழிவு ஆயுதம்) எடுத்தார்களா? இந்தியாவுக்கு நண்பன்போல நடித்து, தாஜ் ஹோட்டலில் தங்கி சிறப்புரையாற்றி,உண்மை நண்பன் பாகிஸ்தானைபற்றி ஒரு வார்த்தைகூட (கண்டிக்கமாட்டார்கள்) கண்டிக்கவில்லை. தென்கொரியாவும், வடகொரியாவும், இந்தியா பாகிஸ்தான் போல பக்கத்துக்கு நாடுகளின் சண்டை. 20000 கி.மீ. தாண்டி வந்து சமரசம் செய்ய துப்பில்லை. சண்டையை வளர்க்கும் நாசகாரர்கள். தவறான வழியில் நீண்ட தூரம் பயணித்து வருகிறார்கள். இது அந்த நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு, இக்கால தலைவர்கள் செய்யும் துரோகம்!!...
balaji - bhavani.erode.,இந்தியா
2010-11-28 08:48:35 IST
no war anywhere in this lovable planet....
ஸ்ரீதர் - சென்னை,இந்தியா
2010-11-28 08:41:15 IST
"இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது".. இது பத்தி நான் இந்த பேப்பர்ல படிச்சா மாதிரியே ஞாபகம் இல்லையே? ஒரு வேள ஸ்டாம்ப் சைசுல விசயத்த போட்டு முடிச்சிடீங்களோ?...
mars - Kanata,இந்தியா
2010-11-28 08:25:44 IST
அமின், சீனாவின் தூண்டுதல் + பக்கபலம், இதுதான் காரணம். காந்தி வழி இன்றய kashmir நிலைமை....
elango - Kuwait,குவைத்
2010-11-28 08:25:25 IST
ஒரு பெரிய இளப்பு ஒன்று நடந்தால் தான் அமரிக்காவை திருத்த முடியும் என்றால் அது நடக்கட்டும் .......
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-28 08:13:10 IST
ஒரு பக்கம் அமெரிகாவுக்கு சரியான பதில்;;;;;;;;;ஆனால் இரு கொரியர்களும் சண்டை போட்டு கொள்ள வேண்டாம்;;;;;;இவனுக யாரு நாடு,நாடாய் போய் போர் செய்வதற்கு;;;;;;;...
elavarasan - thanjore,இந்தியா
2010-11-28 07:42:07 IST
ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்கயா! இவங்க எப்பொதும இப்படித்தான்...
வல்லரசு - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-28 07:37:39 IST
எல்லோரும் காதலியுங்கள்,சும்மா எதுக்கடா சண்டை போடுறீங்க....
சப்பாணி - n,இந்தியா
2010-11-28 07:18:23 IST
அமெரிக்காவிற்கு அடுத்த நாட்டில் மூக்கை நுழைப்பதே வேலை யாக போய் விட்டது.......ஈராக் மாதிரி வட கொரியாவையும் அழிக்க முடிவு செய்து விட்டார் .....ஒபாமா செல்வாக்கு அமெரிக்காவில் குறைந்து விட்டது .......மக்களை திசை திருப்ப எதாவது செய்ய வேண்டும் ......இந்த முறை பலி கடா வட கொரியா............
GP - USA,இந்தியா
2010-11-28 07:08:51 IST
We tend to blame US for everything. I would rather have US as #1 country in the world than a China or a Saudi Arabia. Peace can be achieved thru two means - either thru Gandhian way or thru Military strength. N. Korea is a rouge nation. We need countries like US to keep them in check. Please remember, but for US's role in Second world war, all of you would be speaking in German and you would be still under a colony rule....
jayaram - chennai,இந்தியா
2010-11-28 06:00:42 IST
எவனோ அடிதுக்கொளுகிறான். எதில் அமெரிக்காவிற்கு என்ன வேலை ... ஆயுதகடையை விரிக்க இதுதாண்டா நல்ல டைம் ஒபாமா .... கோள் மூட்டிவிடு அன்னந்தன்பிகள் அடித்துக்கொள்ளட்டும் .. அதில் ஆயுதன் வியாபாரம் செய்ய நல்ல வாய்ப்பு உனக்கு . நல்ல அடிக்கிறாண்ட அஆப்பு . இப்ப போர் வந்தால் இன்னும் உலக பொருளாதரம் மோசமான நிலைக்கு போகுமே என்று இந்த கொரியா நாடுகள் ரெண்டும் உட்கார்ந்து யோசிக்க வேண்டாமா .. மூளையே கிடையாதா?...
கார்த்திகேயன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-28 05:15:48 IST
i read daily this epaper i like it all.... i don know to tell the words to this i like and love this webpage...
கிரிஷ் - montreal,கனடா
2010-11-28 04:57:05 IST
no war please......
சிங்கா - சிங்கப்பூர்,இந்தியா
2010-11-28 04:00:40 IST
...ம். சண்டை மூட்டியாகி விட்டது. இனி பல பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்கா தென்கொரியாவிற்கு ஆயுதங்கள் சப்ளை செய்ய முடியும்....
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-11-28 03:26:33 IST
ஆரம்பம் சினிமாவின் உச்சக்கட்டம், அமெரிக்காவிற்கு இதுத்தான் "காந்தின்" கொள்கையோ....
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-11-28 02:04:15 IST
இந்தியா நாட்டின் "காந்தியின்"கொள்கையை படிக்கும் அமெரிக்க அதிபருக்கு மற்ற நாட்டின் மீது அமைதியை கடைப்பிடிக்க ஏன் முன் வருவதில்லை,காந்தி அமைதியை கடைப்பிடிகவில்லையா அவர் படித்த புத்தகத்தில்.என்ன மாயை....
இபு பாரிஸ் - சர்செல்லஸ்,பிரான்ஸ்
2010-11-28 01:10:16 IST
வடகொரியா வளர்ச்சி அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.கிழக்காசியா பிராந்தியத்தில் தென் கொரியாவை வைத்து கேம் ஆட நினைத்தால் அமேரிக்கா எண்ணத்தில் மண் விழும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக