வியாழன், 2 டிசம்பர், 2010

புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை பெறவே மிலிபான்ட் இலங்கை தொடர்பில் பிரசாரம்: விக்கிலீக்ஸ்

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அந்த நாட்டின் முன்னாள் வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபான்ட், 2009 ஆம் ஆண்டு, இலங்கையின் தமிழர் உரிமைகள் குறித்து பிரசாரம் செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் தூதரகங்கள், தமது அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அனுப்பிய பல்வேறு இரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது.
இதனை அடுத்து விக்கிலீக்ஸ் தொடர்பில் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்காவும் இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டு வருகிறது.
இந்தநிலையில் பிரித்தானிய தொழில்கட்சி தொகுதிகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே டேவிட் மிலிபான்ட் இலங்கை தொடர்பில் தமது பிரசாரத்தை மேற்கொண்டதாக, அமெரிக்க தூதரக அரசியல் அலுவலர் ரிச்சர்ட் மில்ஸ் தமது தரப்புக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
டேவிட் மிலிபான்ட் தமது பிரசாரங்களின் போது 60 வீதப்பங்கை இலங்கை தமிழர் தொடர்பில் செலவழித்ததாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: