ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

ஹாலிவுட் படம்: செல்வராகவனைச் சிக்கவைக்க தீவிரம்!

ஹாலிவுட் படம்: செல்வராகவனைச் சிக்கவைக்க தீவிரம்!செல்வராகவன் எனும் இயக்குநரைப்போல சமூக வலைதளத்தில் சுதந்திரமாக இயங்கும் ஒருவரைப் பார்க்க முடியாது. சமூக வலைதளங்களில் இயங்குவதென்பது செல்வராகவனின் அன்றாட பொழுதுபோக்கில் ஒன்றாகிவிட்டது. இதற்குக் காரணம், அவரது ரசிகர்கள் ட்விட்டர் மூலமாக அவருக்குக் கொடுக்கும் தன்னம்பிக்கையும், அன்பும்தான். ஆனால், அந்த இரு தரப்பினரின் நட்பை தற்போது சர்ச்சைக்குள்ளான ஒன்றாக மாற்றி வருகின்றனர்.
நேற்று மதியம் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு செல்வராகவன் சில பதில்களை அளித்தார். இந்த வினா விடைகள் சுவாரஸ்யமானதாக இருந்ததால், 5 மணிக்கு நாம் பேசலாம் எனச் சொல்லி செல்வா பல தகவல்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்த விவாதம் தொடங்குவதற்கு முன்பு ஹாலிவுட் மாதிரி ரோபாட்டிக்ஸ், ஏலியன், போர், இன்டர்நேஷனல் ஸ்பை மாதிரியான படங்கள் எடுப்பீர்களா? என மதன் என்ற ரசிகர் கேட்ட கேள்விக்கு இதையெல்லாம் ஹாலிவுட்டில் சாகும் அளவுக்கு எடுத்துவிட்டனர். நம் நாட்டிலேயே கடந்த காலம் - நிகழ் காலம் - எதிர்காலம் என பல சொந்தக் கதைகள் இருக்கின்றன. அதில் கவனம் செலுத்தலாம் என்று செல்வா பதில் சொல்லியிருந்தார். நடைபெற்ற உண்மை இப்படியிருக்க, கடந்த ஆகஸ்டு 24ஆம் தேதி வெளியான அஜித்தின் விவேகம் திரைப்படத்தைப் பற்றி செல்வா விமர்சனம் செய்திருப்பதாக தவறான வகையில் ரசிகர்களிடையே பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.


விவாதத்தைத் தொடங்கலாம் என அறிவிக்க செல்வா ஹாலிவுட்டின் Wolverine உடலில் Mr.Bean தலையை வெட்டி ஒட்டிய ஒரு போட்டோவை பதிவு செய்திருந்தார். அந்த போட்டோவையும் அஜித்தைக் கிண்டல் செய்து பதிவிட்டார் என்று கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தச் செய்தி. சமூக வலைதளங்களில் வதந்திகளை உருவாக்கும் கும்பல் அஜித்துக்கும் - செல்வாவுக்கும் 2004இல் ‘காசிமேடு’ என்ற படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை மூலதனமாக வைத்து இந்த வேலையை செய்துவருகிறது. minnambalam

கருத்துகள் இல்லை: