‘‘ஏன் இப்படிப் பேசினாராம்..?’’
‘‘அங்கிருந்த ஒருவரும் அதைக் கேட்டு இருக்கிறார். ‘அவர்தானே நாங்கள் ஜெயிலில் இருக்கக் காரணம்... அவரும் சீக்கிரம் இங்கே வந்துதானே ஆகணும்... அதான் எப்ப வர்றாருன்னு கேட்டேன்’ என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறார்.’’
‘‘சில பேர் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார்களே...’’
‘‘ஆமாம்... சிலரோ பதறிப்போய், ‘நமக்குள்ளே ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டாம்’என்று நாசுக்காகச் சொல்லியிருக்கிறார்கள்... ஆனாலும் ராசா அதை சட்டை செய்யவே இல் லையாம்.’’
‘‘கட்சி தன்னை கை கழுவிவிட்டது என்ற வருத்தம் இருக்கத்தானே செய்யும்...’’
‘‘ராசாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசிய போது, ஒரு தகவலைச் சொல்கிறார்கள். அவர் சிறையில் இ ருந்து வெளிவந்தாலும் கட்சியில் அவருக்கு முன்பு போல முக்கியத்துவம் கிடைக்காது. அதனால் அவர் வேறு ஒரு முயற்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்...’’
‘‘என்ன முயற்சி..?’’
‘‘அவர் தலித்துகளுக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தலாமா என்று நினைக்கிறாராம்... அதற்கான ஆலோசனைகளை ஜெயிலில் இருந்தே செய்து வருகிறாராம்...’’
‘‘இருக்கிற பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள இது போல ஒரு அமைப்பு அவருக்கு தேவைதான்...’’ சிஷ்யை சொன்னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக