நமது பல்கலைக்கழங்களில் முனைவர் படிப்புக்கு ஆய்வு செய்யும் பெண்களின் கையறு நிலை குறித்து நீங்கள் அறிவீர்களா? அவர்களில் சிலர் கைடுகளை ‘திருப்தி’ படுத்தினால்தான் முனைவர் பட்டத்தை பெற முடியும். பெண் போலீசாக இருந்தாலும் கூட அதிகார ஆண் போலீசின் வக்கிரங்களை எதிர்கொண்டே வாழ முடியும். கட்டிடம் கட்டும் மேஸ்திரி கூட தன்னிடம் வேலை செய்யும் சித்தாள் பெண்களை வேலை வாய்ப்பை காட்டியே பணிய வைப்பது சாதாரணமில்லையா? தனியாக 24 மணிநேர கிளினிக் நடத்தும் பணக்கார மருத்துவர்களும், பெரிய மருத்துவமனையின் பணியாற்றும் மருத்துவர்களும் தங்களது செவிலியர்களை இப்படி நடத்துவதற்கு தடையில்லாத வாய்ப்பு இருக்கிறதே? திரையுலகிலோ வாய்ப்பு தேடும் பெண்கள் அனைவரும் இப்படி ‘ஒத்துழைத்தால்தான்’ ஒரு நடிகையாக மாற முடியும்.
இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கை, குடும்ப நிலை, வேலையில் தொடரவேண்டிய கட்டாயம் காரணமாக இந்தப் பொறுக்கித்தனங்களை சகித்துக் கொண்டு குமுறலோடு கடந்து செல்கிறார்கள். அந்தக் குமுறல் வெடிக்கும் போது மட்டுமே நாம் இந்தப் பொறுக்கிகளை அறிய முடியும். அப்படித்தான் சாரு இப்போது பிடிபட்டிருக்கிறார்.ஆக இணையம் துவங்கி வெள்ளை மாளிகை வரை அதிகாரத்தில் உள்ள சில பொறுக்கிகள் தங்களது அதிகாரம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை வைத்து தம்மிடம் பணியாற்றும் பெண்களை கொத்திச் சென்றுவிடலாம் என்றுதான் அலைகிறார்கள். அது தவறல்ல, தவறு என்று பிடிபட்டாலும் அதிகார வசதி கொண்டு சுலபமாக வெளியேறி விடலாம் என்பதுதான் அந்தப் பெண்கள் மிகவும் சுலபமாக வன்முறைக்குள்ளாக்கப்படும் சாத்தியத்தை வழங்குகிறது.
நன்றி வினவு இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக