அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதை ஒட்டி, முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அடுத்து ஆட்சியைப் பிடிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளன. குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சியாக விளங்கும் அ.தி.மு.க., ஊர், ஊராக நடத்தும் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலமும், கூட்டணியில் பல்வேறு புதிய கட்சிகளை இணைத்து வருவதன் மூலமும் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதே போல், தற்போது ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க., ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங் களை அறிவித்து செயல்படுத்த முதல்வர் கருணாநிதி தீவிரம் காட்டி வருகிறார். அதோடு அ.தி.மு.க.,விற்கு போட்டியாக தி.மு.க., சார்பில் முதல்வர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையை தொடர்ந்து, தற்போது திருச்சியிலும் தி.மு.க., பொதுக் கூட்டம் நடத்தி முடித்துள்ளது.
கோவையில், அ.தி.மு.க., கூட்டத்தை மிஞ்ச முடியாத வருத்தத்தில் இருந்த தி.மு.க.,வினருக்கு, திருச்சியில் திரண்ட கூட்டம் உற்சாகத்தை அளித்துள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக, முதல்வர் திருச்சியில் அளித்த பேட்டியில், அடுத்து ஆட்சியமைக்கப் போவதும் தி.மு.க., தான் என ஸ்டைலான தொனியுடன் கூறினார். பொதுக் கூட்டம் நடந்த நாள் வேலை நாளாக இருந்தாலும், அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, அந்த பஸ்கள் எல்லாம் பொதுக் கூட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
கூட்டத்தில்,மேலும், திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை என ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் அழைத்து வரப்பட்டவர்களுக்கு, 200 ரூபாய் தருவதாக கூறி 50 ரூபாய்தான் கொடுத்ததாகவும் இதனால் தான் கூட்டம் அப்படி, அப்படியே கலைந்து சென்று விட்டதாகவும் அக்கட்சியினர் புலம்புகின்றனர். இது சம்பந்தமாக கட்சித் தலைமை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆவேசப்படுகின்றனர்.
இருப்பினும், திருச்சியில் நடந்த தி.மு.க., கூட்டத்தைப் பொறுத்தவரை, சிலை திறப்பு நிகழ்ச்சி, முதல்வருக்கான வரவேற்பு, உற்சாகத்தை வெளிப்படுத்த வழியெல்லாம் ஆட்கள் என ஆங்காங்கே திரண்ட கூட்டம் அப்படி அப்படியே கலைந்து விட்டது. இதனால், திருச்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த 2 லட்சம் பேரில், முதல்வர் பேசும்போது பெரும்பாலானவர்களை காண முடியாத நிலை ஏற்பட்டது என உளவுத்துறையினர் தெரிவிக்கின்றனர். அதே போல், கூட்டத்தில் சேது சமுத்திரத்திட்டம் பற்றி முதல்வர் பேசியது கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், ஜெயலலிதாவை இடி அமீனோடு ஒப்பீடு செய்து மத்திய அமைச்சர் ராஜா ஆவேசப்பட்டதும், ஒய்யாரி, சிங்காரி என ஜெயலலிதாவிற்கு 25 பட்டப்பெயர்களை சூட்டி பொன்முடி பேசியதும், சொம்பு, பாய் என எ.வ.வேலு முகம் சுளிக்கும் படி பேசியதும், வயது முதிர்ந்த கோ.சி.மணியே ஆபாசமாக பேசியதும் பொதுமக்கள் மத்தியில் முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற தவறுகளை இனி வரும் கூட்டங்களில் தவிர்த்தால், முதல்வர் பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள் தி.மு.க.,விற்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
muragun - qatar,இந்தியா
2010-09-12 17:11:31 IST
அய்யா அடுத்தாஆட்சி ஜே ஜே தான்...
yousuf - albaha,சவுதி அரேபியா
2010-09-12 16:14:43 IST
தலைவர்கள் யாராக இருந்தாலும் தரம் தாழ்ந்து தரம் தாழ்ந்த பேச்சு பேசுவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்....
வால்பையன் - தமிழ்நாடு,இந்தியா
2010-09-12 14:56:04 IST
எல்லா கட்சிகள் செய்தது செய்து வருவது ,நாமும் சரியென்று போவது இதுதான் . எல்லாம் விதி என்று போவது நமது வேலை ....
தமிழன் - சென்னை,இந்தியா
2010-09-12 14:26:21 IST
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசம்மாய்ப் போகட்டும்...
arivu - chennai,இந்தியா
2010-09-12 14:16:22 IST
அவர்களின் தரம் திமுகவின் தரம் அவர்கள் பேச்சில் தெரிகிறது. இந்த ஆக்ரோஷ பேச்சில் இருந்தே தேர்தல் தோல்வி பயம் இவர்களை எந்த அளவு தொற்றிக்கொண்டது என்பது தெரிகிறது. என்ன பேசி என்ன செய்ய அதிமுக வெற்றி எழுதப்பட்டு விட்டது. சாணக்கியன் என்று கருணாநிதி தன்னை தானே கொள்ள வேண்டியது தான். அவருக்கு இந்த வாரம் இது வரை பாராட்டு விழா நடக்கவில்லையே!!!!...
kumar - singapore,இந்தியா
2010-09-12 13:55:27 IST
தமிழ் நாடு கோவேர்மென்ட் all give free for what ?மக்கள் முதலில் புரிந்து கொண்டு செயல்படவேண்டும் .must woke verry hot then வி can get money better ப்ரீ நோ சோ good...
நெல்லைவேந்தன் - நெல்லை,இந்தியா
2010-09-12 13:03:52 IST
தி.தீ.சக்தி திருச்சி கூட்டத்திற்கு ஆட்க்களை கூட்டி வந்ததை ஜெயா டிவி தான் வெளிச்சம் போட்டு காட்டி விட்டதே. இப்படி லீவ் விட்டும் பைசா கொடுத்தும் கூட்டி வர்வதுக்கு பதில் பேசாம ஒரு கிரிக்கெட் மேட்ச் ஸ்டேடியம் இல் போய் உட்கார்ந்தா துட்டவது மிச்சம் கூட்டமும் இருக்கும் துட்டும் செலவாஹது...
RP சாமி - THENI,இந்தியா
2010-09-12 12:49:15 IST
நீங்கள் எல்லாம் எப்பதான் திருந்துவிங்க? ஒரு தலைவர் இன்னொரு தலைவரை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் போக்கை விட்டு நல்லதா! நீங்க என்ன கிழிச்சிங்க,என்ன கிழிப்பிங்க, என்று சொல்லி ஓட்டு கேளுங்க. இதே தான் எல்லா கட்சிகளுக்கும்.....................
கோகுல கிருஷ்ணன் - தெக்கலூர்திருப்பூர்மாவட்டம்,இந்தியா
2010-09-12 12:40:00 IST
கருத்து சொன்ன அனைவரும் இந்த தமிழ் நாட்டை பற்றியும் ஆட்சி செய்வோரை பற்றியும் நன்கு புரிந்து வைத்து உள்ளீர்கள். இந்த மானம் கெட்ட மஞ்சள் துண்டு எப்போது மடியும். தமிழகத்திற்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும். மக்கள் ஆட்சி என்று சொல்லி கொண்டு தன் மக்களை வைத்து ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார் மானம் கேட்ட மஞ்சள் துண்டு....
sathish - cbe,இந்தியா
2010-09-12 12:09:06 IST
வெட்கமா ,,அப்படினா என்னதுன்னு கேட்கிற ஜன்மமம் அய்யா நம்ம தலைவரு,, அவர்கிட்டே போய் வெட்கத்தை மானத்தை ரோசத்தை பத்தி பேசலாமா????...
adalarasan - chennai,இந்தியா
2010-09-12 12:08:24 IST
இவர்கள் பதவிக்காக இவ்வாறு கீழ்த்தரமான வார்த்தைகள் பேசுவது புதியது இல்லை! ஐம்பது வருடமாக நடைபெறுவதுதான்! பெரும் தலைவர்கள் ராஜாஜி,காமராஜ்,இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி,வாஜ்பாய் எல்லோரையும் இவ்வாறு பாடிருக்கின்றனர்!! ஜெயா எம்மாத்திரம்! ஆடலரசன்...
பதில் இல்லை - திருச்சி,இந்தியா
2010-09-12 12:04:01 IST
அந்த அம்மா கேட்ட கேள்விகளுக்கு ஒரு அமைச்சரும் பதில் கூறவில்லை ... அனால் ஆபாசம் மட்டும் பேச தெரியும்... மங்குனி அமைச்சர்கள் .......
jegannnnnnnnnnnn - kanithevu,இந்தியா
2010-09-12 12:00:59 IST
YES TALK 100 PERCENT CORRECT. NEXT CM JJ, WAIT FOR 100 DAYS EVERY BODY GET VERY BIG APPU, JEGANNNNNNNNNNN...
உஸ்மான் முஹம்மத் இப்ராகிம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-12 11:46:36 IST
இன்னும் தரக்குறைவாகவும், கண்ணியம் அற்ற முறையிலும் பேசட்டும், அதனால் ஜெயலலிதாவின் இமேஜ் பொதுமக்கள் மத்தியில் பன்மடங்கு வுயர்துவது வுறுதி. இந்த லச்சனத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கோடிகணக்கில் பணபட்டுவாடா அமைச்சர் நேஹ்ருவின் தயவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இந்த பந்தாவெல்லாம் இல்லாமல் ஒரு எதிர்கட்சியாக இருந்துகொண்டு எந்த அரசு எந்திரங்களையும் பயன்படுத்தாமல் மேலும் அவர்களால் மக்களுக்கு எந்த இலவசங்களும் கொடுக்கப்படாமல் லட்சக்கணக்கில் கலையாத கூட்டம் (கடைசியில் ஜெயலலிதாவை விமான நிலையம் சென்று வழியனுப்பும் வரை) நிச்சயம் அடுத்த ஆட்சி அதிமுக வின் கையில் ஒப்படைக்காத வரை தமிழக மக்கள் ஓய மாட்டார்கள். தமிழக மக்களே மறக்காதீர்கள் நமது சின்னம் இரட்டை இல்லை சின்னம், தமிழகம் வீறு நடை போட வுறுதி எடுப்போம் மீண்டும் எம்ஜிஆரின் அதிமுக வின் ஆட்சியை அரியணை ஏற்ற....
Vaithianathan - Muscat,ஓமன்
2010-09-12 11:11:00 IST
இவர்கள் பேசிய பேச்சை பார்த்தால் உண்மையிலேயே பயந்துபோய் தான் இருக்கிறார்கள். அநாகரிகமான இவர்களின் பேச்சு இவர்களுக்கு உள்ள தோல்வி பயத்தையே காட்டுகிறது. அரசியல் ரீதியாக ஜெயலலிதாவை எதிர் கொள்ள இவர்களுக்கு துணிவில்லை. பொட்ட பசங்க....
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-09-12 10:17:13 IST
எவ்வளவு தான் இந்த அமைச்சர்கள் போட்டி போட்டு இப்படி பேசினாலும் இந்த செம்மொழி வார்த்தை போட்டியில் தலைவரை மிஞ்ச யாருமில்லை....
மதுரை அப்பு - அபுதாபி,இந்தியா
2010-09-12 10:10:29 IST
என்ன செய்வது காசு கொடுத்துதான் கூட்டம் சேர்க்கவேண்டிய நிலையில் தான் இன்றைய அரசியல் நிலைமை !!!! அதுவும் தினமும் ௩ மணிநேரம் பவர் கட் ஆகிகொண்டிருக்கும் நேரத்தில் பொது கூட்டத்தில் பகல் போல் வெளிச்சம் இவர்களுக்கு மட்டும் பவர் கட் கிடையாதோ????? அப்பாவி பொதுஜனமே ஏன் உன் பொன்னான நேரத்தை இப்பேர்பட்ட சுயநல அரசியில்வதிகளுக்கு அற்ப பணத்துக்காக செலவிடுகிறாய். இலவசம் என்கிற போதையில் இருந்து எப்போது தெளிவடைகிரயோ அப்போது தான் நாம் நமக்கான உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காண முடியும்...
சுரேஷ் - சுரத்,இந்தியா
2010-09-12 09:39:06 IST
வாசகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் , நம்முடைய கருத்து எந்தஒரு கட்சிக்கும் அதரவாக இருக்க வேண்டாம்...
kamalakanth - chennai,இந்தியா
2010-09-12 09:31:31 IST
Next government is AIADMK government.I can see the feeling from any common people from the society.You can see the enthusiasm from the jaya;s meeting.But karuna meetings people are attracted through money only.If there is no electoral frauds, jaya's victory is assured.Better to adopt paper ballot...
ஸ்ரீதர் - Erode,இந்தியா
2010-09-12 07:28:37 IST
"பொதுக் கூட்டம் நடந்த நாள் வேலை நாளாக இருந்தாலும், அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, அந்த பஸ்கள் எல்லாம் பொதுக் கூட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது" படித்து புரிந்து கொள்ளுங்கள் நமது ஆட்சியை பற்றி....
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-12 07:27:02 IST
உண்மைலேயே உள்ளது உள்ளபடி கட்டுரை வெளியிட்ட தினமலர் நிருபருக்கு என் நன்றி, என்னடா நடக்குது தமிழ் நாட்ல ஒரு இத்து போன கட்சி கூட்டத்துக்கு பள்ளி,கல்லூரிக்கு விடுமுறை விடனுமா, இங்க சொம்படிக்க வர அறிவாளிங்க இத சரின்னு சொல்லட்டும் இனிமே நான் கருத்து சொல்றத விட்டுடுரன் ? சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்க படும் திரு Lee kuan yew , தற்பொழுது பிரதமராக இருக்கும் திரு Lee Hsien Loong அதிபர் திரு S.R நாதன் யாராக இருந்தாலும் ஒரு பொது நிகழ்ச்சியில கலந்துகிட்டா அவர்கள் வரதும் தெரியல போறதும் தெரியல ஒரு கொடி, தோரணை எந்த மண்ணாங்கட்டியும் இல்ல அந்த மாதிரி பெருந்தன்மையா வந்துட்டு போறாங்க இதாண்டா சிங்கப்பூர். நம்ம ஊரு காட்டுவாசிங்க 50, 100 பணத்த கொடுத்து....... ச்சே காரி துப்பனும் போல இருக்கு இவன் அவன தாக்கி பேசுறதும் அவன் இவன தாக்கி பேசுறதும் சகிக்க முடியல.... எப்படா திருந்த போறீங்க நாதாரி பசங்களா......
மணி - சென்னை,இந்தியா
2010-09-12 07:26:38 IST
என்னது?? ஆபாசப் பேச்சைத் தடை செய்யவேண்டுமா? இந்த அசிங்கப் பேச்சுக்கள் மேலிட அனுமதி மற்றும், ஊக்குவிப்பின் பேரில்தான்,அவர்கள் முன்னிலையிலேயே அரங்கேறுகின்றன.மேட்டையிலேயே சிரித்து மகிழ்கிறார்கள்!.?...
வெங்கடேஷ் - சென்னை,இந்தியா
2010-09-12 07:19:32 IST
முன்பு M G R ஆட்சியின் போது மீண்டும் மீண்டும் தோற்ற திமுக கூட்டத்தில் திரு.கருணாநிதி இந்த கூட்டத்தை பார்த்து நான் ஏமாற மாட்டேன் , இங்கு கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக விழுவது இல்லை என்று எனக்கு தெரியும் என்று புலம்பியது ஞாபகம் வருகிறது ....
sசேகர் - chennai,இந்தியா
2010-09-12 06:45:31 IST
ஜெயலலித்தா ஆணவ பேச்சு அசிங்க்மான் பேச்சு மரியாதை இன்மை பேச்சு ஆகியவற்றை பேசும் பொது அதுவும் ஒரு கட்சி தலைவியாய் இருந்துகொண்டு அதை கண்டிக்கும் சக்தி எந்த பத்திரிகைக்கும் இல்லையே அப்படி தொடர்ந்து அந்த பொம்பளை பேசும் போது உண்மை திமுகா தொண்டன் பதிலடி கொடுப்பதில் எந்த தவறும் கிடையாது என்பத உண்மை...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-09-12 04:02:26 IST
விடுமுறை அளித்து, 200 ரூபாய் அளித்து கூட்டிய கூட்டம் தான் அது. மந்திரி நேரு போக்குவரத்து துறை அமைச்சர் என்பதால் அரசின் அணைத்து பேருந்துகளும் ஆட்களை கூட்டி வர பயன்படுத்தப்பட்டன. ஒரு எதிர் கட்சியாக, ஆளும் கட்சியின் அணைத்து இடையூறுகளையும் மீறி வரலாறு காணாத கூட்டம் கோவையிலும் திருச்சியிலும் சேர்ந்தது தான் மஞ்சள் துண்டின் பயத்திற்கு காரணம். அங்க போய் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க துப்பு இல்ல, ஒய்யாரி, சிங்காரி, சொம்பு, பாய் பேச்சு எப்படி தெரியுமா இருக்குது, ஆப்பு மேல இவரகலே வலிய போய் உட்காருகின்ற மாதிரி இருக்குது. ஒரு லட்சம் கோடி ரூபாயை அட்டைய போட்டு நல்ல புள்ள மாதிரி ஒன்னுமே தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா நு பேசுது. நீங்கள் இப்படி பேசுவதால் ஜெயலலிதாவுக்கு தான் விளம்பரம் செய்கிறார்கள்....
மணி , - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-12 03:19:55 IST
பொதுக் கூட்டம் நடந்த நாள் வேலை நாளாக இருந்தாலும், அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, அந்த பஸ்கள் எல்லாம் பொதுக் கூட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. கூட்டத்தில்,மேலும், திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை என ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் அழைத்து வரப்பட்டவர்களுக்கு, 200 ரூபாய் தருவதாக கூறி 50 ரூபாய்தான் கொடுத்ததாகவும் இதனால் தான் கூட்டம் அப்படி, அப்படியே கலைந்து சென்று விட்டதாகவும் அக்கட்சியினர் புலம்புகின்றனர். இது சம்பந்தமாக கட்சித் தலைமை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆவேசப்படுகின்றனர். இருப்பினும், திருச்சியில் நடந்த தி.மு.க., கூட்டத்தைப் பொறுத்தவரை, சிலை திறப்பு நிகழ்ச்சி, முதல்வருக்கான வரவேற்பு, உற்சாகத்தை வெளிப்படுத்த வழியெல்லாம் ஆட்கள் என ஆங்காங்கே திரண்ட கூட்டம் அப்படி அப்படியே கலைந்து விட்டது. இதனால், திருச்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த 2 லட்சம் பேரில், முதல்வர் பேசும்போது பெரும்பாலானவர்களை காண முடியாத நிலை ஏற்பட்டது என உளவுத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஐந்தாவது முறையாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கு , இது வெட்க கேடாக தெரிய வில்லையா ...! இந்த கேடு கட்ட ஆட்சிக்கு துணைபோகும் ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன் தன்மானத்தை அடகு வைக்காதீர்கள் ...! தூக்கி எறியுங்கள் இவர்களை...ஆட்சி கட்டிலில் இருந்து....!...
தமிழன் - USA,யூ.எஸ்.ஏ
2010-09-12 03:19:31 IST
ஒரு லேடிய இத்தனை வேட்டி கடிய ஆம்பளைகள் அசிங்கமா ஒரு பொது கூடத்தில ஒரு மந்திரி பதவியில் இருந்தும் இப்படி கேவலமா பேசி இருபது கேவலமான விஷயம். மேடையில் உள்ள ஒரே ஒருத்தருக்கா இப்படி கேவலமா நடகவீண்டும் ??? உங்கள் முன்னாடி அந்த அம்மா சேலை கட்டினாலும் அவங்க ஆம்பளை போல தான், நீங்க வேட்டியே கட்டினாலும் நீங்க ஒரு .............. தான். பொது கூடத்தில் பேசும்போது கண்ணியமாக பேசவேண்டும். நாட்டில் சின்ன வயதில் உள்ளவர்கள் உங்கள் பேச்சை கேட்டு அவர்கள் மனதில் கூட நீங்கள் ஒரு அசிங்கமான மனிதர்கள் என்ற எண்ணம் உருவாகி விடுகிறது. கேவலமான அரசியலால் இளம் வயதில் உள்ளவர்களை யும் கேடுகாதிர்கள். பணம் சம்பாதிக்க எவளவோ வலி இருக்கு.......
அயுப் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-12 01:40:23 IST
கூட்டம் முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு. உங்கள் சிறப்பு நிருபர் தந்த செய்தியிலேயே எல்லாம் புரியிது....
Govind - SA,இந்தியா
2010-09-12 01:24:03 IST
நாகரீகம் என்றால் தி மு க எத்தனை கிலோ என்று கேட்கும் ? ஆனால் மஞ்சள் துண்டோ ஊரெல்லாம் போய் மேடை நாகரீகத்தை பற்றி வாய் கிழிய பேசுவார் ...வாஜ்பாயி இவரை ஒரு வார்த்தை கூட குறை சொன்னது கிடையாது அவரையே இந்த நாகரீக கோமாளி .."வாஜ்பேயி" என்று கேவலாமாக பேசினார் ..செல்வி ஜயாவை எவ்வள்ளவு கேவலமாக பேசலாம் என்று தி மு க வினருக்குள் ஒரு போட்டியே வைக்கலாம் ! இந்த லட்சணத்தில் கல்லூரிகல்லுக்கு விடுமுறை வேறு ......
ஜி.பன்னாடை பாண்டியன் - wuxi,சீனா
2010-09-12 01:17:56 IST
"மன்னன் எப்படி மக்கள் அப்படி" - என்பது வழக்கு. இப்படி திமுக மந்திரிகள் ஆபாசமாக பேசுவதும் நடப்பதும் ஒன்றும் புதிதில்லையே. ஏன் என்றால் திமுக கலாசாரம் அப்படி. எம்ஜியாரை தொப்பி தலையன் என்றும் மலையாளத்தான் என்றும் இன்னும் அச்சில் ஏற்ற முடியாத வசை பாட்டில் அர்ச்சனை செய்தவர்கள் இவர்கள். இதே அநாகரிக கூட்டம் இந்திராவை பேசாத பேச்சா ? மொத்தத்தில் திருட்டு பணம், அதிகார திமிர், ரௌடிகளின் துணை இவர்களை இப்படி பேச வைக்கிறது. ஒன்று மட்டும் உறுதி; இவர்களால் மக்களின் மனதை வெல்ல முடியாது; EVM வோட்டிங் மசினை தில்லு முள்ளு செய்து வெல்லலாம், அதுவும் காங்கிரஸ் துணையோடுதான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக