பிட்காயின் எல்லாம் $40,000 தொட்டாலும், எனக்கு க்ரிப்டோ கரன்சிகளில் நம்பிக்கை இல்லை, ஆனால் அதன் கட்டமைப்பான ப்ளாக்செயின் மீதும், அதனால் உருவாக்கப்படும் ஸ்மார்ட் காண்ட்ராக்ட் கட்டமைப்புகளின் மீதும் ஆர்வமாய் இருக்கிறேன். பல காலம் முன்பே க்ரிப்டோ கரன்சிகளை பற்றி எச்சரித்தேன். குறிப்பாக ICO (Initial Coin Offering) என்கிற பெயரில் சில வருடங்களுக்கு முன்பு நடந்ததில் 99% ப்ராடுத்தனம் மட்டுமே. ரியல் பணத்தினை கொட்டி, டிஜிட்டல் எண்களை வாங்கி கொண்டு அவை பல கோடி பெறும் என்று ஏமாந்து உலகம் பல பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.
அடுத்த 5 வருடங்களில் மிக பெரிய மாறுதல்கள் வர இருக்கிறது குறிப்பாக ஹெல்த்கேர், நிதி, computational biology மற்றும் மின் வணிகத்தில்.
அடுத்த தலைமுறை சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டமைப்புகள் டார்க் வெப்பில் பேச ஆரம்பித்து விட்டார்கள். சில ஆண்டுகளில் வரும். இப்போதைய பில்லியன் டாலர் நிறுவனங்கள் சேவையை இலவசமாக கொடுத்து, உங்களுடைய நேரத்தினை பணமாக்கி கொழித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாடல் கூடிய விரைவில் மாறும். நான் பல காலமாக சொல்லி கொண்டு இருக்கும் “என் டேட்டா, என் சொத்து, என் உரிமை” என்பது கூடிய விரைவில் நனவாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.
Either am too fast or the world is too slow to catch up. Good riddance though!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக