செவ்வாய், 12 ஜனவரி, 2021

தடுப்பூசி சென்னை வந்தது! மாவட்ட ரீதியான விபரம் வெளியானது

 dailythanthi.com ;  

சென்னை (63,700) , காஞ்சிபுரம்(10,900), செங்கல்பட்டு(23,800) மற்றும் திருவள்ளுவர்(19,600) மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள்

 கடலூர் (7,800), விழுப்புரம்(11,500), கள்ளக்குறிச்சி(6,200) மாவட்டங்களுக்கு 25,500 தடுப்பூசிகள் 

திருச்சி(17,100), அரியலூர்(3,300), பெரம்பலூர்(5,100), புதுக்கோட்டை (6,900),கரூர்(7,800) ஆகிய மாவட்டங்களுக்கு 40,200 தடுப்பூசிகள் 

தஞ்சாவூர் (15,500), நாகப்பட்டினம்(6,400), திருவாரூர்(6,700) மாவட்டங்களுக்கு 28,600 தடுப்பூசிகள் 

மதுரை(23,100), திண்டுக்கல் (13,100), விருதுநகர்(9,700), தேனி (8,200) மாவட்டங்களுக்கு 54,100  தடுப்பூசிகள் 

சிவகங்கை(10,700), ராமநாதபுரம்(8,300) மாவட்டங்களுக்கு 19,000தடுப்பூசிகள் 

நெல்லை (10,900), கன்னியாகுமரி(22,600), தென்காசி(5,100), தூத்துக்குடி(13,100) மாவட்டங்களுக்கு 51,700 தடுப்பூசிகள் 

வேலூர் (18,600), ராணிப்பேட்டை (4,400),திருப்பத்தூர் (4,700) மற்றும் திருவண்ணாமலை(14,400) மாவட்டங்களுக்கு 42,100 தடுப்பூசிகள் 

சேலம் (27,800), கிருஷ்ணகிரி(11,500), நாமக்கல்(8,700), தர்மபுரி (11,800) மாவட்டங்களுக்கு 59,800 தடுப்பூசிகள் 

 கோவை (40,600), ஈரோடு (13,800), திருப்பூர் (13,500), நீலகிரி (5,300) மாவட்டங்களுக்கு 73,200 தடுப்பூசிகள்

 சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. புனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க இருக்கும் நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தடுப்பூசிகளை வைப்பதற்கு குளிர்பதனவசதிகளை ஏற்படுத்துதல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

.முக்கியமாக, அனைத்து மாவட்டங்களிலும் 190 மையங்களில் 2 கட்டங்களாக தடுப்பூசி திட்ட ஒத்திகை நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்குவதற்கான தயார் நிலை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் புனேவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தடைந்தது. இதன்படி புனேவில் இருந்து விமானத்தில் 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு இன்று காலை 10.30 மணிக்கு கொண்டு வரப்பட்டன. இது போல் புனேவில் இருந்து நாட்டின் பல்வேறு மாநகரங்களுக்கு விமானம் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்று சேர்ந்துள்ளன.

ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்களின் 9 விமானங்கள், 56 லட்சத்து 50 ஆயிரம் டோஸ்களை, டெல்லி, சென்னை, கொல்கத்தா,கவுகாத்தி, ஷில்லாங், அகமதாபாத், ஐதராபாத், பெங்களூரு, விஜயவாடா, புவனேஸ்வர், பாட்னா, லக்னோ, சண்டிகார் நகரங்களுக்கு எடுத்துச் சென்றன.

அதன் படிஉ சென்னைக்கு தடுப்பூசிகள் வந்து சேர்ந்து உள்ளன. சென்னையில் இருந்து தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் தற்போது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

 தமிழகம் வந்த கொரோனா தடுப்பூசிகள் மொத்த எண்ணிக்கை 5,36,500-ஆக உள்ளது. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் குறித்த விவர வருமாறு:-

சென்னை (63,700) , காஞ்சிபுரம்(10,900), செங்கல்பட்டு(23,800) மற்றும் திருவள்ளுவர்(19,600) மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள்

 கடலூர் (7,800), விழுப்புரம்(11,500), கள்ளக்குறிச்சி(6,200) மாவட்டங்களுக்கு 25,500 தடுப்பூசிகள் 

திருச்சி(17,100), அரியலூர்(3,300), பெரம்பலூர்(5,100), புதுக்கோட்டை (6,900),கரூர்(7,800) ஆகிய மாவட்டங்களுக்கு 40,200 தடுப்பூசிகள் 

தஞ்சாவூர் (15,500), நாகப்பட்டினம்(6,400), திருவாரூர்(6,700) மாவட்டங்களுக்கு 28,600 தடுப்பூசிகள் 

மதுரை(23,100), திண்டுக்கல் (13,100), விருதுநகர்(9,700), தேனி (8,200) மாவட்டங்களுக்கு 54,100  தடுப்பூசிகள் 

சிவகங்கை(10,700), ராமநாதபுரம்(8,300) மாவட்டங்களுக்கு 19,000தடுப்பூசிகள் 

நெல்லை (10,900), கன்னியாகுமரி(22,600), தென்காசி(5,100), தூத்துக்குடி(13,100) மாவட்டங்களுக்கு 51,700 தடுப்பூசிகள் 

வேலூர் (18,600), ராணிப்பேட்டை (4,400),திருப்பத்தூர் (4,700) மற்றும் திருவண்ணாமலை(14,400) மாவட்டங்களுக்கு 42,100 தடுப்பூசிகள் 

சேலம் (27,800), கிருஷ்ணகிரி(11,500), நாமக்கல்(8,700), தர்மபுரி (11,800) மாவட்டங்களுக்கு 59,800 தடுப்பூசிகள் 

 கோவை (40,600), ஈரோடு (13,800), திருப்பூர் (13,500), நீலகிரி (5,300) மாவட்டங்களுக்கு 73,200 தடுப்பூசிகள்

கருத்துகள் இல்லை: