இலங்கைத் தேயிலை மலைகளில் சிறுத்தைகளினாலும் குளவி..தேனீக்களாலும் உயிர் மோசங்கள் நடப்பதைப் போன்று..நீலமலையில் யானைகளினால் உயிர் மோசங்கள் நடக்கின்றன....ஓர் அடர்ந்தக் காட்டையொட்டிய மலைகளில் மீண்டும்..... மீண்டும்...மீண்டும்..பெண்கள் கொழுந்து பறித்துப்.....பறித்து. மாய்கின்றார்கள்.
ஆண்கள் அதிகமாக பெண்களின் உழைப்பிலேயே தங்கியுள்ளார்கள்..கவ்வாத்து வேலைகளில் அவர்களுக்கு ஒவ்வொரு தேயிலைச் செடிகளுக்கேற்ப 75 சதத்திலிருந்து 1 ரூபாய்....2 ரூபாய் என்று தனியார் தோட்டங்களில் கூலி வழங்கப்படுகின்றது...
விறகு கட்டுடன் நிற்கும்பெண்.மஸ்கெலியா அக்கரை தோட்டத்தைச் சேர்ந்தவர் சென்ற் ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தில் படித்தவர் கணிதத்தை தவிர சமயப் பாடத்தில் ஏ சித்தியும் ஏனைய ஐந்து பாடங்களில் ஸி சித்தியும் பெற்றவர்..அரச வேலை முயற்சித்து எதுவும் கை கூடவில்லை. இங்குள்ளவர்கள் பயங்கர ஏமாற்றுக்காரர்கள்.! பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்று கவலை பட்டார். தற்போது நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டார்களாம்.
கணவன் பெயர் பிரான்சிஸ்..ஊட்டியில் ஒரு ஸ்டார் ஓட்டலில் சமையல்காரராக இருக்கிறார் இந்தப் பெண் ஊட்டியில் கலைஞர் சந்தையில் இடியப்பம் தேங்காய் சம்பல் உணவு பார்சல் விற்கிறார்.இலங்கையர் விரும்பி வாங்குகிறார்கள்.ஸ்டார் ஓட்டலுக்கும் இவர் இடியப்பம் சப்ளை பண்ணுகிறார்.
மகன் கூடலூரில் படிக்கிறார். "இன்னும்
ஆறு மாசத்துல இலங்கைக்கு வருவோம். கட்டாயம் சேர் வீட்டுக்கு நாங்க வருவோம்! தேயிலக்காட்டு வேலைக்குப் போயிருந்தா வீணாப் போயிருப்போம் சேர்!" என்று சிரித்தார்."வீட்டுக்கு வந்து தேத்தண்ணீ குடிச்சிட்டுப் போங்க சேர்!" என்றார் அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை அறிந்து மனம் நிம்மதியடைந்தது! ஒரு லெமன் பப் பிஸ்கட் ஒன்றை கொடுத்தேன்.."நம்ம நாட்டு பிஸ்கட் சேர்!" என்று உணர்ச்சி வசப்பட்டார்.இன்னும் "நம்ம நாடு" என்ற உணர்வை இழக்கவில்லை!
மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இலங்கைக்கு "விசிட்" அடிக்க வருவதை அறிந்து மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் அந்த சகோதரியிடமிருந்து விடைபெற்றோம்.!
சீனா திபேத்தை ஆக்கிரமித்துக் கொண்டபோது....மார்ச்சு மாதம் 31ம் திகதி 1959 ம் ஆண்டு 150¸000 அகதி மக்களோடு ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவுக்கு வந்தார் .தற்போது 84 வயதான அவர் ஹிமாச்சலா பிரதேசத்தில் தரம்சாலாவில் வசித்து வருகிறார்.
திபேத்தியர்கள் சிலருக்கு நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரில் குளிர்சாதன உடைகளை பிரதானமாகக்கொண்ட சந்தை ஒன்றை இந்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது.திபேத்திய அகதி மக்கள் சாதுவானவர்களாக இருக்கின்றார்கள் .இந்திய அரசு அவர்களுக்கு அரச உத்தியோகம் பல்கலைக்கழக பிரவேசம் சம்பந்தப்பட்ட விடயங்களிலும்.... இன்றுவரை இந்தியாவில் 60 ஆண்டுகள் வாழ்ந்தும் 1951ம் ஆண்டு ஐ.நா மாநாட்டு அகதிகள் தீர்மானம் படி இன்று வரை இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படாதது..பற்றியும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். .இன்று ஏறக்குறைய 85 ஆயிரம் இளைய சமூகத்தினர் அமெரிக்கா....கனடா... ஜர்மனி...சுவிட்சலாந்து ஆகிய நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றுள்ளார்கள்.அகதிகளாக வந்த தொகையில் 44 வீதத்தினர் குறைந்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக